உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: நடிகர் விஜய் கட்சி கோட்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில் பழனிசாமி ஆட்சியை பிடிக்க முடியாது; அவர் பகல் கனவு காண்கிறார். அந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுவோம்; கூட்டணி அமைச்சரவைஅமைப்போம்.கூட்டணி ஆட்சி என்ற ஆசை காட்டி பா.ஜ., பக்கம் உதிரி கட்சிகளை இழுக்க போட்டிருந்த பிளானுக்கு, 'ஆட்சியில் பங்கு' எனக் கூறி, விஜய் ஒட்டுமொத்தமா வேட்டு வச்சுட்டாரே! தமிழ்நாடு வருவாய் துறைஅலுவலர் சங்க மாநில செயலர் ஏ.தமிழரசன் பேட்டி: எங்களது ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர், ஊழியர்கள், ஏற்கனவே ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.எங்கள் கோரிக்கையை அரசு ஏற்று, உடனே அரசாணை வெளியிட வேண்டும். இல்லாவிடில் நவ., 26 முதல் அலுவலக பணிகளை புறக்கணித்து, அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இதுக்கெல்லாம் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அசர மாட்டாங்க... போராட்டத்துக்கு தாராளமா ஏற்பாடு செய்யலாம்!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி பேச்சு: தி.மு.க., இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழக அரசு,9 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. தி.மு.க.,வினரின் குடும்ப ஆட்சியை எதிர்த்தே, நடிகர் விஜய் கட்சி துவங்கி உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, பழனிசாமி முதல்வராவதுநிச்சயம்.அதெல்லாம் இருக்கட்டும்... அந்த 9 லட்சம் கோடி ரூபாய் கடனில், அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கியது மட்டும் எவ்வளவு?நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி: அமரன் படத்தில் நடிக்க மனம், உடல் ரீதியாகதயாரானேன். ராணுவ உடையை கடைசியாக போட்ட பின், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டேன். அந்த உடையை விட, 'முகுந்த்' எனும் பெயர் தான் மிகவும் பிடித்தது.முகுந்த் பணி செய்த இடத்தில் ஷூட்டிங் நடந்தது;அப்போது, ஒரு சிலருக்கு அடிபட்டது. சினிமாவில் நான் செய்ய வேண்டிய, 'ரோல்'கள் நிறைய உள்ளன;அரசியலை பற்றி பின்னர் பார்ப்போம்.அடடா... இவருக்கும் அரசியல் ஆசை துளிர் விட ஆரம்பிச்சிடுச்சு போல தெரியுதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி