உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி: நண்பர் விஜய் கட்சி துவங்கியது அவரது விருப்பம். எந்த கட்சியையும் குறைத்து மதிப்பிடவோ, கூடுதலாக மதிப்பிடவோ முடியாது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. இப்போதே யார், யாருடன் கூட்டணி என ஆருடம் சொல்ல முடியாது. பா.ம.க., தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது இல்லை. அரசியல் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி மாற்றி அமைக்கப்படுகிறது. கூட்டணியை மாத்திக்கிறது எல்லா கட்சிகளும் செய்றதுதான்... ஆனா, தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாத்துறது, இவரது கட்சி மட்டும் தான்!மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் பேட்டி: முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், இந்திய அரசுக்கு எதிரான வீடியோக்களை வெளியிட்ட, 120, 'யு டியூப்' சேனல்களை முடக்கி உள்ளோம். இன்னும் பல சேனல்களை முடக்க உள்ளோம். இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவு செய்யும் யு டியூப் சேனல்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சேனல்கள் முடக்கப்படும். அரசுக்கு எதிரான சேனல்களை மட்டும் முடக்கினால் போதுமா...? இளைய தலைமுறையை சீரழிக்கும் இன்னும் பல சேனல்கள் இருப்பது தெரியாதா?தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி: புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு என் வாழ்த்துகளை சொல்லி விட்டேன். அடுத்தடுத்து அவரது நிலைப்பாடு, செயல்பாட்டை பொறுத்து தான் கருத்து சொல்ல முடியும். தமிழக மக்களை பொறுத்தவரை அ.தி.மு.க., ஒன்றிணைந்தால், 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக உள்ளது. 2026ல் எங்களை இணைக்காவிட்டால், நல்ல முடிவாக எடுப்போம். 'நடந்து முடிஞ்ச லோக்சபா தேர்தலில் பா.ஜ., மட்டும் தான் எங்களுக்கு ஒரே ஆப்ஷனா இருந்துச்சு... இப்ப, விஜய் வேற ஆபர் கொடுத்துள்ளார்'னு சொல்றாரா?ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேட்டி: நடிகர் விஜய், 'பாம்பை கையில் எடுத்துள்ளேன்' என, சொல்கிறார். அந்த பாம்பு என்பது முதல் எதிரியான பாசிசம். தமிழகத்தில் மக்களை பிளவுபடுத்தும் பாசிசம் ஓர் அணி. அதை எதிர்க்கும் திராவிட சக்தி மற்றொரு அணி. இதில் ஏதாவது ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். தெரியாமல், மதவாத சக்திகளுக்கு அவர் வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது.'மதவாத அணியை எதிர்க்கிற திராவிட சக்தியிடம் போறேன்'னு, அ.தி.மு.க., பக்கம் விஜய் போயிட்டா இவங்க பாடு திண்டாட்டமாகிடுமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை