உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர்பாலகிருஷ்ணன் பேட்டி: விஜய் வருகை, தி.மு.க., கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. நாங்கள் தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், மக்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டே இருப்போம். அதேசமயம், பா.ஜ., அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்திருப்போம்.'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு' என, விஜய் கூறியுள்ளார். இது, அரசியல் கட்சியினரை இழிவுபடுத்துவதாக உள்ளது.கூட்டணி தயவில் ஆட்சியைப் பிடித்தாலும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தராத தி.மு.க.,வின் செயல்பாடு இவங்களை கவுரவப்படுத்துவதாக இருக்குதோ? தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயற்குழு தீர்மானம், இருட்டில் துாக்கக் கலக்கத்தில், கண்களை மூடிக்கொண்டு நடிப்பவர்களின் தெளிவுக்கு ஒப்பானது. 'நீட்'தேர்வு வேண்டாம் என்று சொல்வது, ஊழலுக்கு துணைபோகும் செயல் என்பதுகூட தெரியாத பேதமை. இந்தியா தன் நிர்வாக வசதிக்காக, மாநிலங்களை உருவாக்கியதுஎன்பது தெரியாமல், மொழி அரசியலை முன்னெடுப்பது அறியாமை. மொத்தத்தில்,ஒரே குட்டையில் ஊறிய பல மட்டைகளில், புதிய மட்டை இது. தன் முதல் எதிரின்னு பா.ஜ.,வை அறிவித்த விஜய்க்கு, இவரிடம் இருந்து பாராட்டுபத்திரமா கிடைக்கும்?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: பழனிசாமி, விஜயின் காலைப்பிடித்து, தன் 11வது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என கனவு காண்கிறார். விஜயோ, பழனிசாமியின் எடுபடாத தோல்வி தலைமையை, தன்வெற்றிக் கழகத்திற்குஉரமாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார். கனவுகளை,திட்டமிடுதல் வென்றுவிடும் என்பதை, பழனிசாமிக்கு காலம் உணர்த்த காத்திருக்கிறது. பழனிசாமி மீதான கோபத்தில்,எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க.,வே தோற்கணும்னு துடிக்கிறாரே!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: ஒரு அரசியல்கட்சி வெற்றி பெறுவது என்பது, மக்கள் கையில்தான் உள்ளது. அதை தனிநபர்கள் முடிவு செய்ய முடியாது. மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை வீழ்த்தி, தமிழகத்தில்மக்களுக்கான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக தரும். அதற்கானவியூகங்களை தேர்தல் நேரத்தில் காண்பீர்கள்.இவங்க வகுக்கும் வியூகங் களை எல்லாம், ஆளுங்கட்சியின் கடைசி நேர, 'பட்டுவாடா' அடிச்சு துாளாக்கிடுமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி