உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர், கே.பி.முனுசாமி பேச்சு: தி.மு.க.,வை அழிக்க பார்க்கின்றனர் என, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, தமிழக அரசின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவிப்பதால், தி.மு.க.,வை அழிக்க பார்ப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். இதன் மூலம், முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க.,வை பார்த்து பயப்படுவது தெரிகிறது.இப்படி ஏதாவது பேசி வைக்காதீங்க; கட்சியினர் மிதப்பா இருந்துட போறாங்க... சட்டசபை தேர்தலில் உஷாரா வேலை பார்க்க, உருப்படியா ஏதாவது ஆலோசனையை சொல்லுங்க!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான, அ.தி.மு.க., உரிமை மீட்புக்குழு தலைவரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலருமான ரஞ்சித்குமார் பேச்சு: தமிழகம் முழுதும், 234 சட்டசபை தொகுதிகளில் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார். அது, வெற்றி பயணமாக வேண்டும் என்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். பன்னீர்செல்வத்தின் ஒற்றுமை முயற்சிக்கு தோல்வி ஏற்படலாம். எனினும், இணைப்பு நடந்தே தீரும். கட்சிக்கு ஆளுமையான, பண்பான, சிறப்பான தலைமை அமையும் போது தான், நல்லாட்சி மலரும்.அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க காட்டும் முனைப்பை விட, பன்னீர்செல்வத்தை கட்சியில் மீண்டும் சேர்க்கக் கூடாதுன்னு காட்டுற முனைப்பு தானே பழனிசாமி கிட்ட அதிகமா இருக்கு!த.மா.கா., தலைவர், ஜி.கே.வாசன் பேட்டி: நடிகர் விஜய் கட்சியின் வருங்கால செயல்பாடுகள், மக்கள் பணி இவற்றையெல்லாம் வைத்து தான் கணிக்க முடியும். காலம் தான் அதற்கு பதில் சொல்ல முடியும். பொறுத்திருந்து பார்ப்பது தான் விவேகமான அரசியலாக இருக்க முடியும். கட்சி துவங்கி, மாநாடு நடத்தி, 2026ல் ஆட்சியை பிடிப்பேன்னு மட்டுமல்ல; அது, கூட்டணி ஆட்சின்னும் படபடன்னு வெடிக்கிறார் விஜய்... இவர் இன்னும் பொறுமை, விவேகம்னு பேசிட்டு இருக்கார்!தமிழக, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர், ஜி.கே.நாகராஜ் அறிக்கை: நடிகர் விஜய் கட்சி உதயத்திற்கு பின், திராவிட மாடலுக்குள் போட்டி உருவாகி, இது குறித்து விவாதமும் அதிகரித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர், நடிகர் சீமானையும், திருமாவளவனையும் தங்களை தமிழராக முன்நிறுத்த துாண்டியிருக்கிறது. 'திராவிடத்திற்கு மொழியும் இல்லை; திராவிடம் என்ற நிலப்பரப்பும் இல்லை; திராவிடம் என்ற இனமும் இல்லை' என்ற திருமாவளவனின் கருத்து, திராவிடம் குறித்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறது.திராவிடம் பற்றி இதுவரை தெரிஞ்சிக்காத இளைஞர்கள் கூட, அதை விவாத பொருளாக்கி தெரிஞ்சிக்க வச்சிடுவாங்க போலிருக்கே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ