உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவரான, வேடசந்துார், தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்திராஜன் பேட்டி: நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சமுதாய பிரச்னை. அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பட்சத்தில், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எப்படியாகிலும், போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டும் கலாசாரத்தை உருவாக்கியதே திராவிட கட்சிகள் தானே... அதன் பிரதிநிதியாக இருந்துக்கிட்டு இவர் இப்படி சொல்றாரே!தமிழக, பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்' என, தமிழக துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது தாத்தா, தந்தை பெயர்கள், அவரது பெயர் எல்லாம் தமிழ் பெயரா... இப்படி பெயர் வைத்துக்கொண்டு, இவர் இப்படி ஒரு வேண்டுகோள் விடுக்கலாமா?ஹிந்தி வேண்டாம்னு சொல்லிட்டு, தி.மு.க.,வினர் பலரும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தலையா... அந்த மாதிரி தான் இதுவும்!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான மருது அழகுராஜ் அறிக்கை: நிர்வாகிகளை வைத்து, தன் பொருளாதாரத்தை வளர்த்தால், ஒருவர் கட்சிக்கு முதலாளி ஆகலாம். ஆனால், தொண்டர்களாலும், மக்களாலும் தான், ஒருவரால் தலைவராக முடியும். அ.தி.மு.க.,வில் முதலாளிகள் இருக்கின்றனரே தவிர, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல், தலைவர்களுக்கான ஆளுமைகளுக்கு, அங்கு வாய்ப்பே இல்லை. இதை, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தோல்விகளால், மக்கள் உணர்த்தி விட்டனர்.அது சரி... உங்கள் தலைவர் பன்னீர்செல்வத்தை தலைவராக் கணும்னு கூட, வேணாம், குறைந்தபட்சம் கட்சியில் சேர்க்கணும்னு கூட, எந்த ஒரு தொண்டனும் சொன்ன மாதிரி தெரியலையே!தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் பேட்டி: கருணாநிதிக்கு மகனாக பிறந்த காரணத்தால் ஸ்டாலின் முதல்வர், கருணாநிதியின் பேரனாக பிறந்த ஒரே காரணத்தால் உதயநிதி துணை முதல்வராகி உள்ளனர். இந்நிலை இல்லாவிடில், ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட இவர்கள் வெற்றி பெற முடியாது. இவர்கள் எங்களுக்கு சவால் விடுகின்றனர். எங்கள் பொதுச் செயலர் பழனிசாமிக்கு சவால் விடும் அளவிற்கு உதயநிதிக்கு தகுதி, அனுபவம் வரவில்லை.கட்சியில் எவ்வளவோ சீனியர்கள் இருக்க, சட்டுனு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை பிடிச்சிட்ட இவருக்கு தகுதி, அனுபவம் அதிகமோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !