பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு: வரும் 27ம் தேதி துணை முதல்வர்உதயநிதியின் பிறந்தநாள், மார்ச் 1ல் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள், ஜூன் 3ல், கருணாநிதி பிறந்த நாள் என, தொடர் நிகழ்ச்சிகள் வருகின்றன. இதன்படி, தற்போது நாம் எழுதும் ஒவ்வொரு சுவர் விளம்பரங்களிலும், அவை இடம் பிடிக்க வேண்டும். அவை, வரும் 2026 சட்டசபை தேர்தல் வெற்றி வரை தொடர வேண்டும். இந்த வரிசையில், உதயநிதியின் மகன் இன்பநிதி பிறந்த நாளை ஏன் விட்டுட்டாரு? எம்.எல்.ஏ.,வும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலருமான மதியழகன் பேச்சு:டிச., 5ல், துணை முதல்வர்உதயநிதி கிருஷ்ணகிரி வருகிறார். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, நான்காவது முறையாக அவர் வந்தாலும், துணை முதல்வராக பொறுப்பேற்ற பின், மாவட்டத்திற்கு முதல் முறையாக வருகிறார். வரும் 2026லும் தி.மு.க., ஆட்சிதான் என்பதை பறைசாற்றும் வகையில் சிறப்பான வரவேற்பளிக்க வேண்டும்.உதயநிதிக்கு வரவேற்பு அளிப்பதில் காட்டுற அக்கறையில் பாதியை, தொகுதி வளர்ச்சியிலும் காட்டினா நல்லாயிருக்கும்!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன்திருப்பதி அறிக்கை: கேரளாவில் ஒரு முஸ்லிம், தன் கடைக்கு வந்த இஸ்ரேல் தம்பதியை, வெளியே போகச் சொல்லியும், அவர்களுக்கு பொருட்கள் எதுவும் தர முடியாது என்றும் தகராறு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மதச்சார்பற்ற இந்தியா என மார்தட்டிக் கொள்பவர்கள், இந்த விவகாரம் குறித்து அமைதி காப்பது ஏனோ? மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த விவகாரம், இந்தியா மதவாத நாடாக துவங்கி இருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.அதானே... இதே சம்பவம், ஒரு ஹிந்து கடையில் நடந்திருந்தால்,நாடு முழுதும் கொந்தளிச்சுருக்குமே!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தளவாய்சுந்தரத்தின் நீக்கத்தை ரத்து செய்து, அவரது மாவட்ட செயலர் மற்றும் அமைப்பு செயலர் பதவியை, அவரிடமேதிருப்பி கொடுத்ததுபோல, பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உட்பட அனைவரதுநீக்கத்தையும் திரும்பப் பெற்று, அவரவர் வகித்த பதவிகளை, அவர்களிடமே திருப்பி தந்து, கட்சியை பழனிசாமி ஒன்றுபடுத்தினால், கூட்டணிக்காக யாரிடமும் கையேந்த தேவை இருக்காது. கட்சி அலுவலகத்தை சூறையாடிய பன்னீர்செல்வமும், கட்சிக்கு கட்டுப்பட்டு, அமைதியாக இருந்த தளவாய் சுந்தரமும் ஒன்றாக முடியுமா?
உதயநிதியின் பிறந்தநாள், மார்ச் 1ல் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள், ஜூன் 3ல், கருணாநிதி பிறந்த நாள் என, தொடர் நிகழ்ச்சிகள் வருகின்றன. இதன்படி, தற்போது நாம் எழுதும் ஒவ்வொரு சுவர் விளம்பரங்களிலும், அவை இடம் பிடிக்க வேண்டும். அவை, வரும் 2026 சட்டசபை தேர்தல் வெற்றி வரை தொடர வேண்டும்.
இந்த வரிசையில், உதயநிதியின் மகன் இன்பநிதி பிறந்த நாளை ஏன் விட்டுட்டாரு?