உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: வங்க தேசத்தில், இந்தியர்களுக்கு ஆதரவாக, இந்தியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில்இந்தியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கத் தவறிய தி.மு.க., அரசுக்கு கண்டனம். தமிகத்தில் பா.ஜ.,வினரின் ஆர்ப்பாட்டத் திற்கு அனுமதி கொடுக்க வேண்டியது தி.மு.க., அரசின் கடமை. இந்தியர்களுக்கு ஆதரவாக, தமிழ கத்தில் யார் ஆதரவு குரல் கொடுத்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனுமதி அளிக்க வேண்டும்.'திராவிட மாடல் அரசு' இந்தியர்கள் என்றெல்லாம் பார்க்காது... ஹிந்துக்கள்னு தான் பிரித்து பார்க்கும்!

அப்பாற்பட்டு அனுமதி அளிக்க வேண்டும்.

'திராவிட மாடல் அரசு' இந்தியர்கள் என்றெல்லாம் பார்க்காது... ஹிந்துக்கள்னு தான் பிரித்து பார்க்கும்! எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின்தலைவர் கா.லியாகத் அலிகான்அறிக்கை: விழுப்புரம், கடலுார்,கள்ளக்குறிச்சி வெள்ள பாதிப்புக்கு தலா, 2,000 ரூபாயை தமிழக அரசு நிவாரணமாக அறிவித்துள்ளது.பார்லிமென்டில், ஒத்திவைப்புதீர்மானம் கொடுத்து மத்தியஅரசை வலியுறுத்தினாலும்உரிய பதில் இல்லை. பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ், வாய்ச்சவடால் விடாமல், கூட்டணி கட்சியான பா.ஜ., அரசிடம் வாதாடி, நிதியை பெற்றுத்தரவேண்டுமே தவிர, உபதேசம் செய்யும் நேரம் இதுவல்ல.ராமதாஸ் கோரிக்கையை எல்லாம் மத்திய அரசு காது கொடுத்து கேட்குமா, என்ன?அ.தி.மு.க.,வில் நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் இயங்கும் பெங்களூரு புகழேந்தி பேட்டி: 'இரட்டை இலை வழக்கில், தங்களது தரப்பையும் கேட்ட பின் முடிவெடுக்க வேண்டும்'என, பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், 'நான்கு வாரங்களில்முடிவெடுக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, பன்னீர்செல்வத்துக்கு அருமையான தீர்ப்பு. மறுபடியும் பன்னீர்செல்வம் முகாமில் தஞ்சம் அடைய நுால் விடுறாரோ?கட்சியினருக்கு அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கடிதம்: தி.மு.க., ஆட்சியில் தினமும் கொலை, கொள்ளைகள்,பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், போதைப்பொருட்கள் நடமாட்டம் என,தமிழகத்தின் சட்டம் - ஒழுங்குஅடியோடு சீர்குலைந்துள்ளது.மக்கள் விரோத தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றி, சுயநலமிக்க துரோகக் கூட்டத்திற்கு, தகுந்த பாடம் புகட்ட உறுதியேற்போம்.மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை அகற்றினாலும், அந்த காலியிடத்தை இவருக்கு தமிழக மக்கள் தரவே மாட்டாங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !