வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த அம்மா ஒழுங்காகப் படித்துவிட்டுவந்து பேசவும் தான் ஒரு படிப்பறவற்றவர் என்பதைப் பல முறை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை, இவர்
துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு: இந்திய சமூகத்தில், பா.ஜ., ஏற்படுத்தி யுள்ள பிளவுகளை சரி செய்வதற்கு பல காலம் ஆகும். பார்லிமென்டில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து கொண்டே போகிறது. அதிகார அமைப்புகளில் பட்டியல் இன மக்களின் பிரதிநிதித்துவம் குறைந்து கொண்டே போகிறது. முத்தலாக், சி.ஏ.ஏ., பொது சிவில் சட்டம் ஆகியவை சிறுபான்மையினருக்கு எதிரானவை.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையையே அபகரிக்க சதி நடக்குதே... அதை பத்தியும் கொஞ்சம் பேசினா என்ன? அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: 'தமிழகத்தில் மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்க, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் செவி சாய்க்காத தி.மு.க., அரசு, தற்போது நேர்காணல் முறையில், அவசர கதியில் மருத்துவர்களை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன' என, மருத்துவர் சங்கங்கள் கேள்வி எழுப்புகின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதை எதிர்த்த ஸ்டாலின், முதல்வரான பிறகு அதே முறையை பின்பற்றுவது, மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவர்களை ஏமாற்றும் செயலாகும்.அடுத்த வருஷம் தேர்தல் வருதே... கட்சியினர் சிபாரிசுகளை ஏற்று, மருத்துவர்களை நியமித்தால் தானே தேர்தல் வேலைகள் ஜரூரா நடக்கும்!தமிழக பா.ஜ., பொருளாளர்எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்ல 144 தடை. மதுரையில் மட்டுமல்லாமல், மாநிலம் முழுதும் தடை போட்டு, ஹிந்து பரிவார் அமைப்புகளை, தி.மு.க., அரசு கைது செய்திருக்கிறது. இதற்கு காரணம், முஸ்லிம்களை திருப்திபடுத்தி, அதன் வழியே, ஏற்கனவே தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லிம் ஓட்டுகளை, 2026ல் தக்க வைத்துக் கொள்ளத்தான். இதை, தி.மு.க.,வுக்கு ஓட்டு போடும் ஹிந்து வாக்காளர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகின்றனர்?அவங்க ஒரு காலமும் புரிஞ்சுக்க மாட்டாங்க... அதுவரைக்கும் திராவிட மாடல் வண்டி ஓடும்!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தங்கள் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடாமல், கூட்டணிக்கு விஜய் வந்து காப்பாற்றுவார் என பழனிசாமியும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பழனிசாமி வந்து விடுவார் என பா.ஜ.,வும் நம்பிக் கொண்டு, காலத்தை விரயமாக்கி கடமை தவறுகின்றனர். இவரது தலைவர் பன்னீர்செல்வம் மட்டும், அவரது கடமையை சரியா செய்றாராமா?
இந்த அம்மா ஒழுங்காகப் படித்துவிட்டுவந்து பேசவும் தான் ஒரு படிப்பறவற்றவர் என்பதைப் பல முறை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை, இவர்