பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 10
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் பேச்சு: பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவுபெற்று, சமூகத்தில் சுய மரியாதையுடன் வாழ வேண்டும். பெண்கள் முன்னேற்றமே ஒரு குடும்பத்தின் முன்னேற்றம். குடும்ப முன்னேற்றமே மாநிலத்தின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, த.வெ.க., அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண்கள் தான் உங்க கட்சியின் பிரதான ஓட்டு வங்கி என்பதால், நலத்திட்டங்களை வாரிவிடுறீங்களே... அப்படியே, ஆண்கள் பக்கமும் கொஞ்சம் கவனத்தை திருப்பலாமே! மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பேட்டி: கோவையில் திறக்கப்பட்ட ஈ.வெ.ரா., நுாலகத்தில், போலியான புத்தகங்கள் வாங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாகவும், மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து, ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். அறிவை வளர்க்க வேண்டிய நுாலகத்தில் கூட ஊழல் செஞ்சதை, யாராக இருந்தாலும் மன்னிக்கவே முடியாது! பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. அனைத்து கட்சிகளும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பொது வேட்பாளராக அறிவிக்க முன்வந்தால், எங்கள் கட்சியின் தேசிய தலைமையிடம் தெரி வித்து முடிவை அறிவிப்போம். உங்க சொந்த மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தொகுதி யில் களமிறங்க உங்களுக்கு என்ன தயக்கம்...? த.வெ.க.,வை மீறி ஜெயிக்க முடியாதுன்னு பயப்படுறீங்களோ?
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக வனத் துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேச்சு:
கடந்த தி.மு.க., ஆட்சியில், கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டா-வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போதைய த.வெ.க., அரசு, லஞ்சம் மற்றும் முறைகேடுகள் இல்லாத சிக்கனமான, வெளிப்படையான நிதி மேலாண்மையை கையாண்டு, கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல், மக்கள் நலத் திட்டங்களாக மாற்றி அரசு வழங்கி வருகிறது.- நல்ல விஷயம் தான்... தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மட்டும் தான், ‘நம்பர் – 1, 2’ எல்லாம் இருக்கணும்... கடன் வாங்குறதுல கடைசி இடத்துக்கு போகும் வரை கடுமையாக உழைக்கணும்!