பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 26
மா.கம்யூ., கட்சியின் தமிழக செயலர் சண்முகம் பேச்சு: ‘மேகதாது அணையை கட்டியே தீருவோம்’ என, காங்., கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சிவகுமார் அடிக்கடி கூறிக் கொண்டே இருக்கிறார். இதன் வாயிலாக, தமிழக விவசாயிகள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதுடன், ‘கர்நாடக விவசாயிகளின் காவலன்’ என்ற எண்ணத்தை விதைப்பது என, தந்திரமாக செயல்படுகிறார். தமிழக காவிரி பாசன உரிமையை பாதுகாப்ப திலும், கர்நாடகா வின் சதியை முறியடிப்பதிலும் ஒன்றுபட்டு நிற்போம். காவிரி பிரச்னையில் ஒன்றுபட்டு நிற்கிறீங்க என்றால், அனைத்து கட்சியினரும் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திச்சு இது குறித்து பேசலாமே! காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் பேட்டி: காங் கிரஸ் சேலம் மாவட்ட நிர்வாகி கள் நியமனத்தில் அதிருப்தி நீடிக்கிறது. சில மூத்த தலைவர்கள் கட்சி வளர்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்; திறமையான இளைஞர்கள் முன்னேற கூடாது என நினைக்கின்றனர். தாங்கள் தோற்று போகும் ஒரு போரில் ஈடுபட்டுள்ளோம் என்பதை அவர்கள் உணரவில்லை. ஒரு நாள் உண்மை வெல்லும் என் பது அவர்களுக்கு தெரியவில்லை. இளம் மற்றும் கடின உழைப்பாளிகளான திறமையாளர்கள் அழிந்து போவதை காண்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கிட்டத்தட்ட, 60 வருஷங்களா தமிழகத்தில் காங்கிரசால ஏன் ஆட்சிக்கு வர முடியலை என்பது இப்ப இவருக்கு தெரிஞ்சிருக்குமே! த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வார்டுகள் மறுவரையறை, மறுசீரமைப்பு, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த பணிகளுக்காகவே உள்ளாட்சி தேர்தல் தள்ளி போடப்பட்டுள்ளது. ஆனா, கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை பகிர்ந்து கொடுப்பதில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கவே, உள்ளாட்சி தேர்தலை தள்ளி போடுறீங்களோ என்ற கேள்வி எழுதே!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு:
தினமும் பொழுது விடிந்தால் கொலை செய்திகள் தான் தமிழகத்தின் தலைப்பு செய்திகளாகின்றன. த.வெ.க., அரசின் பொறுப்பற்றத்தனத்தால், எதையும் செய்யலாம் என்ற துணிச்சலை குற்றவாளிகள் பெற்றிருக்கின்றனர். சட்டம் – ஒழுங்கை கோட்டை விட்டுவிட்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு, ‘தனிப்பட்ட பிரச்னையால் ஏற்பட்ட கொலைகள்’ என்ற காரணத்தை த.வெ.க., அரசு சொல்லப் போகிறது.- தி.மு.க., ஆட்சியிலும் கொலைகள் நடந்தப்ப, முதல்வரா இருந்த ஸ்டாலின், ‘தனிப்பட்ட விரோதங்களால அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை பெரிதுபடுத்துவதா’ன்னு ஆதங்கப்பட்டாரே!