உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 22

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 22

‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை பேட்டி: உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் அமைப்பு தனித்துப் போட்டியிடும். அரசியலில் பெண்களை தரக்குறைவாக பேசுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். தேர்தல் ஆணையம் போன்ற அமைப்பு கள் மீதான நம்பிக்கையை குலைக்க கூடாது. தமிழகத் தில் பள்ளி மாணவர் சேர்க்கை, உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் விகிதம் குறைந்துள்ளது. 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். பெண்களுக்கு மரியாதை, கல்வி வளர்ச்சியை உறுதி செய்து, 18 வயதுக்குட்பட்டோரின் சமூக வலைதள பயன்பாட்டை கட்டுப்படுத்துவது காலத்தின் கட்டாயம் தான்! தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை: த.வெ.க., அரசின் வருவாய் குறைவு, முதலீட்டு செலவுகளை மேற்கொள்ள முடி யாமை போன்றவையால் தா ன் கடன் தேவை குறைந்து உ ள்ளது. பல கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, சாலை மற்றும் கட்டட பணிகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். வளர்ச்சி பணிகளை தாமதப்படுத்தி, முடிக் கப்பட்ட பணிகளுக்கு நிதி வழங்காமல், பண இருப்பை அதிகமாக காட்டி கொள்வது தான் சாதனையா? பண இருப்பு, கடன் அளவு, வளர்ச்சி பணிகள், வேலை வாய்ப்புன்னு எல்லாத்தையும் சேர்த்து பார்த்தால் தான், அரசின் நிதி செயல்பாட்டை முழுமையாக மதிப்பிட முடியும்! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: தமிழகத்தில் சட்டம்- – ஒழுங்கு சீர்குலைந்து உ ள்ளதை சரி செய்யாமல், அரசியல் பழிவாங்கலுக்காக பொய் வழக்கு புனைந்து, நா.த.க., தாராபுரம் வேட்பாளர் கார்த்திகாவை த.வெ.க., அரசு கைது செய்துள்ளது. ஐந்து மாத ஆட்சியிலேயே நிர்வா க சீர்கேடுகள் தலைவிரித்தாடுவதால், மக்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். அரசியல் பழிவாங்கலில் அரசு கவனம் செலுத்தினால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை. அஞ்சு மாசத்துலயே இவ்வளவு ஆவேசம் என்றால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உங்க வசன பயிற்சிக்கு எந்தக் குறையும் இருக்காது!

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

பட்டினப்பாக்கத்தை போல, பல்லவன் இல்லத் தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க கூடாது என்பதற்கு அதிக காரணங்கள் உள்ளன. அங்கு தலைமைச் செயலகம் கட்டப்பட்டால், சுற்றுச்சூழலை பாதிப்பதுடன், வெள்ள ஆபத்து ஏற்படுவதற்கும் வழி வகுக்கும். இந்த விஷயத் தில், தமிழக அரசு திறந்த மனதுடனும், தொலை நோக்கு பார்வையுடனும் செயல்பட வேண்டும். சென்னைக்கு வெளியில் புதிய தலைமை செயலகத்தை கட்ட அரசு முன்வர வேண்டும்.- தலைமை செயலகம் எங்கு அமைந்தாலும் சரி, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் இடமாக இருப்பது தான் முக்கியம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ