உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

மா.கம்யூ., கட்சியின் மதுரை எம்.பி., வெங்கடேசன் அறிக்கை: மும்மொழிக் கொள்கை வாயிலாக, ஹிந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு ஹிந்தியை திணிக்கப் பார்க்கிறது. 'மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்றால், கல்விக்கான நிதியை தரமுடியாது' என, மாநிலங்களை மிரட்டி வருகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம், தன் அன்றாட வானிலை அறிக்கையை தற்போது ஹிந்தியிலும் வழங்கத் துவங்கி உள்ளது கண்டனத்துக்குரியது.இது பற்றி, அறிக்கை விட்டு என்ன புண்ணியம்...? லோக்சபாவில் அல்லவா நீங்க குரல் கொடுக்கணும்! தமிழக காங்., துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டி.என்.முருகானந்தம் பேச்சு: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பதிலடி எதுவும் கொடுக்கவில்லை. 'நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, மத்திய அரசு எடுக்கும் முடிவு களுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும்' என, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனாலும், மத்திய அரசு செவிசாய்க்காமல், பாகிஸ்தானுக்கு பதிலடி தராமல் இருக்கிறது.கடந்த 2008ல், மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், மத்திய காங்., அரசு உடனே பதிலடியில் இறங்கியதா?தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி: கரூரில், எங்கடா உங்க மந்திரி என்ற திரைப்பட போஸ்டரால், மன உளைச்சலுக்கு ஆளான தி.மு.க.,வினர், அப்போஸ்டர் மீது பேப்பர் ஒட்டி மறைத்தது அல்லாமல், தியேட்டரில் படத்தை மாற்ற வைத்துள்ளனர். ஆனால், பதவியை ராஜினாமா செய்ய வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது என்பதை தி.மு.க.,வினர் உணரவில்லை. அவங்களால மாத்த முடிஞ்சது, போஸ்டரை மறைக்கிறதும், படத்தை துாக்குறதும்தான்!எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கா.லியாகத் அலிகான் அறிக்கை: 'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்' எனக்கூறிய பழனிசாமி, தற்போது, 'அ.தி.மு.க., - பா.ஜ., வெற்றிக் கூட்டணி' என முழங்குகிறார். எண்ணெயுடன் தண்ணீர் சேரும்போது எண்ணெயையும் உபயோகிக்க முடியாது; தண்ணீரையும் குடிக்க முடியாது. தவளையுடன் எலி சேர்ந்தால், தவளையும் வாழாது; எலியும் வாழ முடியாது என்பது பழனிசாமிக்கு தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.உவமானம் எல்லாம் நல்லாதான் இருக்கு... இதே உவமானம் தி.மு.க., கூட்டணிக்கும் பொருந்துமில்லையா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
மே 07, 2025 12:34

எங்களுக்குப் படிப்பறிவும் பட்டறிவும் இல்லையே! எப்படி நாடாளுமன்றத்தில் பேசமுடியும்? அங்கு எங்களை உண்டு இல்லை எனச் செய்துவிடுவார்களே! எனவேதான் இங்கே காற்றில் கம்பு சுற்றிக் பொண்டுள்ளோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை