உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி பேட்டி: தமிழகத்தில் பா.ஜ., காலுான்ற வாய்ப்பு இல்லை. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பது சந்தேகம் தான். தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நிர்ப்பந்தத்தில் தான் கூட்டணி தொடர்கிறது. கீழ்மட்ட தொண்டர்களிடம் ஒற்றுமை இல்லை. தி.மு.க., கூட்டணியில் எந்த கட்சியும் கூட்டணி ஆட்சி குறித்து பேசவில்லை. 2026ல், தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். ' பா.ஜ.,வை எதிர்ப்பது' என்ற நிர்ப்பந்தத்தில் தான், தி.மு.க.,விலும், கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றன. அ.தி.மு.க., முகாமில் இருந்து, பா.ஜ., வெளியேறினால், நெல்லிக்காய் மூட்டையாக தி.மு.க., கூட்டணி சிதறிடும்! தமிழக காங்., ஆராய்ச்சி துறையின் தலைவர் மாணிக்கவாசகம் அறிக்கை: இந்தியாவில் கிட்டத்தட்ட, 20 மாநிலங்கள் இயற்றிய சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்திலும் இயற்ற வேண்டும். அரசு சேவைகளை பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் கிடைக்கச் செய்ய, தற்போதைய தி.மு.க., அரசு உடனே இச்சட்டத்தை சட்டசபையில் கொண்டு வர வேண்டும். அதான், 'உங்களுடன் ஸ்டாலின்' என்று, 45 நாட்களில் சேவை வழங்குவோம்னு புதுசா துவங்கியிருக்காங்களே! மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: 'கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண் டும் ' என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக, நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தோம். அம்மனுவை விசாரணைக்கு ஏற்று, ஆக., 18ல் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும், அதுவரை கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவதை நிறுத்தி வைக்கவும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இது, கொடிக் கம்பங்கள் அகற்றும் பிரச்னையில் நாங்கள் நடத்தி வரும் தொடர் சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. சாலையோரங்களில் போக்கு வரத்துக்கு இடையூறாக கொடிக் கம்பங்களை நட்டுவிட்டு, அதற்கு ஆதரவாக சட்டப் போராட்டமும் நடத்துவது சரியா? தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: 'ஓரணியில் தமிழ்நாடு' என முதல்வர் ஸ்டாலினும், 'மக்களை காப்போம்' என முன்னாள் முதல்வர் பழனிசாமியும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் நோக்கம், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். இவர்கள், மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. பேசாம இவரும், 'கள் இறக்குவது எங்கள் உரிமை'ன்னு ஒரு சுற்றுப்பயணத்தை துவக்கி, மக்களிடம் ஆதரவு திரட்டலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
ஜூலை 22, 2025 12:06

கொடி பிடிப்பதையும் உண்டியல் குலுக்குவதையும் தவிர வேறென் தெரியுமையா எங்களுக்கு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை