வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மதிமுக வில் இருவரே உள்ளனர்: வடிவேலுவும், மகனும….
ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ எம்.பி., பேட்டி: கரூரில், 41 பேர் பலியான சம்பவத்தில், அனைவருடைய தவறும் உள்ளது. தி.மு.க.,வில் தொண்டர் படை உள்ளது என்றால், அதற்கு விதை விதைத்தது வைகோ தான். அதேபோல் ம.தி.மு.க.,விலும் உள்ளது. விஜய் மிகப்பெரிய நடிகர். அவருக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியை, அவரது கட்சியினர் தான் செய்ய வேண்டும். வருங்காலங்களில் அதற்கான அமைப்பை அவர் உருவாக்க வேண்டும். இவரது தந்தை, தி.மு.க.,வில் உருவாக்கிய தொண்டர் படைக்கு இன்னும் வேலையிருக்கு... ஆனா, ம.தி.மு.க.,வின் தொண்டர் படையினர் எந்த கூட்டத்தை கட்டுப்படுத்த இருக்காங்கன்னு தான் தெரியலை! பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு: உங்கள் சந்ததியின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், இந்த தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டும். தி.மு.க., வரவே கூடாது. தி.மு.க., ஆட்சியை விரட்டுவதற்கு, மக்கள் புரட்சி செய்ய வேண்டும். கரூருக்கு நேரில் சென்ற முதல்வர், துணை முதல்வர் இருவரும், கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த சாராய உயிரிழப்புகளுக்கு ஏன் நேரில் செல்லவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவம், ஆட்சியாளர்களின் தவறு என்பதால் அடக்கி வாசிச்சாங்க... கரூர்ல நடந்தது, எதிர்க்கட்சி விவகாரம் என்பதால், அரக்க பறக்க ஓடுனாங்க! கன்னியாகுமரி காங்., - எம்.பி., விஜய் வசந்த் அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு தடை உள்ளதால், அண்டை மாவட்டத்தில் இருந்து நான்குவழிச் சாலை மற்றும் இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு மண் கொண்டு வரப்படுகிறது. தற்போது மண் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் மண் தேவைப்படுகிறது. ஆகவே, தட்டுப்பாடின்றி மண் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் மண் எடுக்க தடை இருக்கிறப்பவே, கேரளாவுக்கு லாரி, லாரியா கடத்துறாங்களே... அது எப்படி நடக்குது? தமிழருவி மணியன் தலைமையிலான, காமராஜர் மக்கள் கட்சியின் மாநில செயலர் மீனா ஞானசேகரன் பேட்டி: காமராஜர் முதல்வராக இருந்தபோது, ஊரெங்கும் பள்ளிகளை திறந்து, கல்வி கற்போரின் எண்ணிக்கையை அதிகரித்தார். தி.மு.க., அரசு, 'டாஸ்மாக்' மது விற்கும் மற்றும் மது அருந்தும் நிலையங்களை, 'எப்.எல்., லைசென்ஸ்' என்ற பெயரில் வழங்கி, குடிப்போரின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், குடிநோயாளிகளை பெருக்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் இல்லாத கிராமங்கள் கூட இருக்கு... ஆனா, மதுக்கூடங்கள் இல்லாத கிராமங்களே இல்லை!
மதிமுக வில் இருவரே உள்ளனர்: வடிவேலுவும், மகனும….