உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: பாட்டிலுக்கு 10 ரூபாய், மூட்டை நெல்லுக்கு 40 ரூபாய், வேலைக்கு பல லட்சம் ரூபாய் என, குறுக்குசால் ஓட்டியே, அராஜக ஆட்சி நடத்தும் தி.மு.க., தோல்வியின் விளிம்பில் உள்ள நிலையில், குறுக்கு வழியில் பா.ஜ., ஆட்சியை பிடிக்க நினைக்கிறது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது வேடிக்கை. பா.ஜ.,வினர் என்ன தான் காட்டுக்கத்தல் கத்தினாலும், அந்தக் கத்தலைச் சரியான முறையில் செய்யலேன்னா, யார் காதுலயும் விழாது. அதனால, தி.மு.க.,வினர், இப்போதைக்கு கவலையே பட வேண்டாம்! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எடுக்கும் முடிவுகள் அனைத்தும், திடமான, தைரியமான, நேர்மையான முடிவுகள். கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை, கட்சி தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வர்? பழனிசாமி தான், அ.தி.மு.க.,வின் முகம்.அவரது கருத்துகளை உள் வாங்குவோர் தான் உண்மையான, அ.தி.மு.க., விசுவாசி. பழனிசாமியின் முடிவுகள் திடமான, தைரியமான, நேர்மையான முடிவுகள் தானான்னு, வர்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் சொல்லிவிடுமே. அந்த நேரத்துல, உங்க பதில் என்னவா இருக்கும்ன்னு கற்பனை செஞ்சு பார்த்தா, சிரிப்பா இருக்கு! தி.மு.க., செய்தி தொடர்புக் குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை பிணைக் கைதியாக வைத்து, அவரை இயக்குவது பா.ஜ., தான். அதனால்தான் அவருக்கு சகல மாடங்களிலும், சாதகங்கள் சாத்தியமாகின்றன. ஆனாலும், 2026 சட்டசபை தேர்தலில், மக்கள் மன்றம் தகுந்த பாடம் புகட்ட காத்திருக்கிறது. பாடம், பழனிசாமிக்கு மட்டுமல்ல; பா.ஜ.,வுக்கும் சேர்த்துதான். 'சாதக விஷயங்கள்' குறித்து, அ.தி.மு.க.,வில் நீங்க இருந்தவரை, வாய் திறக்காமல் இருந்த மர்மம் என்னவென, அந்த பழனிசாமிக்கும் தெரியும்; இந்த பா.ஜ.,வுக்கும் புரியும். நினைவில் வைக்க வேண்டியது மட்டும் தான் உங்க வேலை! பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: நோயாளிகள் -- டாக்டர்கள் விகிதத்தின்படி, தமிழக அரசு மருத்துவமனைகளில் குறைந்தது, 24,000 டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், 12,000 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இச்சூழலில் மருத்துவ கல்லுாரிகளில் இருக்கும் டாக்டர்களை ஆட்குறைப்பு செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. முதல்ல உங்க கட்சியில இருக்கிற பிரச்னைகளைச் சரி செய்யப் பாருங்க. 'கிடப்பது எல்லாம் கிடக்கட்டும்; கிழவனை துாக்கி மணையில் வை'ங்கிற கதையா நீங்க பேசிட்டிருந்தீங்கன்னா, உங்க சிஸ்டர் உங்களை முழுங்கிடப் போறாங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை