உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'அரசு மருத்துவமனைகளில் மாதந்தோறும் ஆய்வு நடத்த வேண்டும்' என, அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மாதந்தோறும் மட்டுமல்ல; தினந்தோறும் கூட ஆய்வு நடத்தட்டும், வரவேற்கிறோம். இருப்பினும், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் கூடுதலாக போதிய மருத்துவர்கள், செவிலியர் பணியிடங்களை அரசு உருவாக்க வேண்டும். 'திராவிட மாடலின் திருப்தியான ஆட்சியில், நோயாளிகள் எண்ணிக்கை குறைஞ்சிடிச்சி... கூடுதல் மருத்துவர்களும், செவிலியர்களும் வேண்டாம்'னு கற்பனை உலகுல இருக்கிற அமைச்சருக்கு, டாக்டர் பெருமாள் பிள்ளையின் கோரிக்கை மனதில் ஏறுமா என்ன!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் தேர்தல் தோல்விகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 1991 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றார். 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வால் எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை. 2014 லோக்சபா தேர்தலில், ஒரு இடத்தை கூட தி.மு.க., பிடிக்கவில்லை. இதை எல்லாம் மறந்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசக்கூடாது. அடுத்த ஆண்டு குடியரசு தினத்தில், தமிழகத்தின் முதல்வராக பழனிசாமி நிச்சயம் இருப்பார். தோல்வி வரலாறு எல்லா கட்சிகளுக்கும் இருக்கு... 1996, 2006 சட்டசபை தேர்தல்கள், 2019, 2024 லோக்சபா தேர்தல்களில், அ.தி.மு.க.,வுக்கும் தோல்வி கிடைச்சிருக்கே! தமிழக பா.ஜ., விவசா ய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி: கடந்த, 1,000 ஆண்டுகளுக்கு முன்பே, வாய்க்கால் வெட்டி, 50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறச் செய்த நதிநீர் இணைப்பின் முன்னோடியான காளிங்கராயருக்கு, அவர் பிறந்த ஊரான ஈரோடு, வெள்ளோட்டில் வெண்கலச்சிலை அமைத்த அமைச்சர் முத்துசாமிக்கும், அதை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கும் பாராட்டுகள். காளிங்கராயரின் நதிநீர் இணைப்பு திட்டத்தை, இன்றைய ஆட்சியாளர்கள் செயல்படுத்தி இருந்தால், தண்ணீருக்காக பக்கத்து மாநிலங்களிடம் நாம் கையேந்த வேண்டாமே! திருவள்ளூர் தொகுதி காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் பேட்டி: காங்கிரஸ் கூட்டணி குறித்து, கட்சியின் உயர்மட்ட அளவில் பேசி வருகின்றனர். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும். எங்களுடைய கூட்டணி சித்தாந்த கூட்டணி. எங்களுடைய நிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 'இண்டி' கூட்டணிக்கு ராமதாஸ், பிரேமலதா வருவரா என்பதை, மேலிடம் தான் முடிவு செய்யும். ராமதாஸ், பிரேமலதாவை கூட்டணியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பதை, தி.மு.க., தலைமை தானே முடிவு செய்யணும்... இவர், காங்., மேலிடம் பக்கம் கை காட்டுறாரே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ