உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

வி.சி.க.,வை சேர்ந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேட்டி: பா.ம.க., தலைவர் அன்புமணி சமூக நீதி கணக்கெடுப்பு கொள்கையை முன்வைத்து முதல்வர் விஜயை அடிக்கடி சந்தித்து வருகிறார். அதில் எந்த தவறும் கிடையாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையும் கோட்பாடும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தான். அன்புமணி, முதல்வரை சந்திப்பதிலும், நெருக்கமாக இருப்பதிலும் எந்த தவறும் இல்லை. 'ஒருவேளை கூட்டணி அரசில் பா.ம.க.,வும் பங்கேற்றால், அமைச்சர் பதவியை தியாகம் பண்ணிட்டு நாங்க வெளியில போக மாட்டோம்... அனுசரிச்சு போயிடுவோம்'னு சொல்ல வர்றீங்களோ?தமிழக பா.ஜ., தொழில் வல்லுநர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் சுந்தர்ராமன் அறிக்கை: கடந்த தி.மு.க., ஆட்சியில், மின் துறையில் ஏற்பட்ட கடும் நிதி நெருக் கடியை ஒப்புக்கொண்டு, புதிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. மின் வாரியத்தின் கடன், 2.47 லட்சம் கோடி ரூபாய். வெறும் நஷ்ட கணக்கை காட்டுவது வெள்ளை அறிக்கை அல்ல. அதற்கு காரணமானவர்களை, அடையாளம் காட்டுவது தான் உண்மையான வெள்ளை அறிக்கை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பதானே தி.மு.க., முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது நடவடிக்கையை ஆரம்பிச்சிருக்காங்க... அடுத்தடுத்து, மின்வாரிய பிரச்னைகள்லயும் நடவடிக்கை வரும்! தமிழக பா.ஜ., செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை: முதல்வர் விஜய் அவர்களே... சட்டசபையில், 'அப்பாவை காணோம்' என சினிமா வசனம் பேசுவதை விட்டுவிட்டு, சீரழிந்து வரும் சட்டம் - ஒழுங்கு, தலைவிரித்தாடும் போதை பொருள், தொடர் மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் உடனே கவனம் செலுத்துங்கள். தமிழகத்திற்கு தேவை உங்கள் நடிப்பு அல்ல; நல்லாட்சி. ஏற்கனவே நல்லாட்சி என்ற பெயரில் நடிச்சிட்டு இருந்தவங்க வீட்டுக்கு போயிட்டாங்க... அவங்களுக்கு ஆதரவா இவர் குரல் கொடுக்கிறாரே! தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி: சட்டசபையில், கவர்னர் உரைக்கான பதிலை எழுதி வைத்து விஜய் பேசியுள்ளார். 'உங்க அப்பாவை காணோம்' என்றெல்லாம் பேசுகிறார். ஸ்டாலின் குறித்து பேச முதல்வர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது. சட்டசபையிலேயே மிரட்டுகிறார். அவரது மிரட்டலுக்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. மிசா காலத்திற்கே தி.மு.க., பயப்படவில்லை. முதல்வர் விஜய் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். சட்டசபையில், 'அப்பாவை காணோம்'னு யார் பெயரையும் குறிப்பிடாமல் தானே விஜய் பேசினார்... உங்களுக்கு ஏன் சுருக்குன்னு குத்துது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !