உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை: அரசியல்வாதிகள் பேசுவதை வரிக்கு வரி ஆராய்ந்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கினால், தமிழகத்தில் உள்ள அனைத்து போலீசாரும் கைது பணியில் மட்டுமே ஈடுபடும் அவல நிலை ஏற்படும். தி.மு.க., - எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சிற்காக, ஜாமினில் வரமுடியாத அளவில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தது அவசியமற்றது. ஆட்சியாளர்களுக்கு சகிப்புத்தன்மை மிக அவசியம். வாஸ்தவம் தான்... ஆட்சிக்கு எதிராக பேசுறவங்களை எல்லாம் கைது பண்ணி சிறையில் அடைக்கிறேன்னு கிளம்பினா, தமிழகத்தில் இருக்கும் சிறைகள் பத்தாது!தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் எழிலரசன் பேட்டி:எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய முயற்சி செய்கின்றனர். காரணம், கரூர், பெருந்துறை இடைத்தேர்தலில், அவரை வேலை செய்யாமல் தடுத்து விடலாம். அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைத்து விட்டால், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் வேலை செய்ய ஆள் இல்லாமல் செய்து விடலாம். இடைத்தேர்தலை சந்திக்க த.வெ.க.,வுக்கு திராணி இல்லாமல், தோல்வி பயத்தில் பொய் வழக்கு போடு கின்றனர். 'இடைத்தேர்தல் நடக்க இருக்கும் ஏழு தொகுதிகளிலும், முதல்வர் விஜய் தலா அஞ்சு நிமிடங்கள் பேசினாலே போதும்... எதிர்க்கட்சிகள் டிபாசிட் காலியாகிடும்'னு அவரது கட்சியினர் சொல்றாங்களே! காங்., தமிழக பொதுச்செயலர் வசந்தராஜ் பேச்சு:கடந்த லோக்சபா தேர்தலில், ராகுல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை நாங்கள் பெருமையாக சொல்கிறோம். ஆனால், தி.மு.க., முன்னாள் எம்.பி., அப்துல்லா, 'இதை ஸ்மிருதி இரானிகிட்டே சொல்லு; அந்தம்மா சிரிக்கும்' என, தரக் குறைவாக பேசியுள்ளார். தன் கட்சியின் முன்னாள் எம்.பி., ஒரு பெண்ணை தரக்குறைவாக விமர்சிப்பதை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஏன் கண்டிக் காமல் இருக்கிறார்? காங்., கட்சியை திட்டுறவங்களுக்கு தி.மு.க., தலைமை தனி மரியாதை தரும் என்பது இவருக்கு தெரியாதா? தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி பேட்டி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லுார் அருகே தந்தையும், அவரது 5 வயது மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. சட்டம் - ஒழுங்கு முழுதும் சீர்கெட்டு விட்ட நிலையில், தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆகிவிட்டது. இவர் குறிப்பிடும் சம்பவம், தனிப்பட்ட குடும்ப பகை காரணமா நடந்தது... அதுக்கெல்லாம் அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ