உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

காங்., கட்சியைச் சேர்ந்த, கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் பேட்டி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். கர்நாடக அரசு, தேர்தலை முன்னிட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறது. தமிழக மக்கள் அச்சப்பட தேவை இல்லை. அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக வனத்துறையினர், மூன்று தமிழர்களை சுட்டு கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. இதை, சி.பி.ஐ., விசாரிக்க, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.இங்க இவ்வளவு பேசுற நீங்க, கர்நாடக மாநில காங்., அரசிடம் போய் இது சம்பந்தமா பேசிட்டு வரலாமே!காங்., கட்சியைச் சேர்ந்த, தேனி மாவட்ட முன்னாள் தலைவர் முருகேசன் பேச்சு:லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அதற்கு முன் ஆயிரம் கருத்துக்கள் வரலாம். கூட்டணியை முடிவு செய்யும் இடத்தில் கட்சி தலைவர் ராகுல், விஜய் இருப்பர். நாடு முழுதும் ஏற்றுக்கொண்டுள்ள தலைவர் ராகுல். சட்டசபை தேர்தலுக்கு முன், 'விஜய் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க மாட்டார்' என்றனர். அதை துாள் துாளாக்கி விட்டு ஜெயித்துள்ளார். அதே நிலை, காங்., கட்சிக்கும் வரும். வடமாநிலங்களிலும் விஜயின் செல்வாக்கு பரவிட்டு இருப்ப தால், அதை வச்சே காங் கிரஸ் கரையேறிடும்னு நம்புறாரோ? காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேச்சு: பார்லி மென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் எதுவும் நடக்கவில்லை. தமிழக சட்டசபையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுகின்றனர். சபாநாயகர் தீர்ப்பளிக்கிறார். பார்லிமென்டில் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிப்பதில்லை. இதை பார்க்கையில், எம்.எல்.ஏ.,வாக இருப்பது நல்லது என தோன்றுகிறது. தமிழகத்தில் நடக்கப் போற ஆறு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் முடிவுல இருக்கீங்களோ? தி.மு.க., செய்தி தொடர்புக் குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: தமிழக ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், பக்த பிரகலாதனாக இருப்பார் என நினைத்தால், அந்த தம்பியோ பலகார பிரகலாதனாக இருக்கிறார். முருகன் சொத்தை பாதுகாக்காமல், முறுக்குக்கு, 'பர்த் சர்ட்டிபிகேட்' கேட்டுக் கொண்டு திரிகிறார். கோவில் பிரசாதங்கள் தரமா இருக்கணும் என்ற அக்கறையில், அமைச்சர் நடவடிக்கை எடுக்கிறதை போய் குறை சொல்றீங்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஆக 31, 2026 22:52

ப. சிதம்பரத்துக்கு MLA ஆசை வராது. வந்தால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போலிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை