உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

கொசு தொல்லை

வாணரப்பேட்டை பல்லவன் தெருவில், கொசு தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.சூர்யா, வாண்ரப்பேட்டை.

உழவர் சந்தை செயல்படுமா?

உழவர்கரை அருகே உள்ள உழவர் சந்தை செயல்படாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் வெகு துாரம் சென்று காய்கறி பொருட்களை வாங்கி வருகின்றனர்.சுப்ரமணியன், பூமியான்பேட்டை.

புதர் மண்டியுள்ளது

முத்தியால்பேட்டை செயின்ட் சைமோன்பேட் பகுதியில் உள்ள காலி மனைகளில் புதர்கள் மண்டி கிடப்பதால், கொசுக்கள் அதிகரித்து வருகிறது.புவனா, முத்தியால்பேட்டை.

சாலையில் கழிவுநீர்

குருமாம்பேட் 8வது, குறுக்கு தெருவில், சைடு வாய்க்கால் உடைந்து கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.சுதாகரன், குருமாம்பேட்.

நாய்கள் தொல்லை

ரெட்டியார்பாளையம் துாய தம்பி கார்டன் பகுதியில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.சீத்தாராமன், ரெட்டியார்பாளையம்.

மரக்கிளை அகற்றப்படுமா?

தட்டாஞ்சாவடி கொக்கு பார்க் அருகே மரக்கிளைகள் கீழே விழும் நிலையில் இருப்பதால், அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சம்பத், தட்டாஞ்சாவடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ