புகார் பெட்டி
மரத்தால் ஆபத்து
நுாறடி சாலை, மோகன் நகர் அருகே, மரம் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால், அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்துவேலன், எல்லைப்பிள்ளைச்சாவடி. விபத்து அபாயம்
வில்லியனுார் மூலக்கடை அருகே எம்.ஜி.ஆர்., சிலை அகற்றிய இடத்தில் மெகா பள்ளம் இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.ரஜினி முருகன், வில்லியனுார். நாய்கள் தொல்லை
லாஸ்பேட்டை சாந்தி நகர், பகுதியில் நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.மணி, லாஸ்பேட்டை. தெரு விளக்கு எரியுமா?
தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம் தெப்பக்குளம் அருகே தெரு விளக்கு எரியாமல் இருப்பதால், விபத்து நடந்து வருகிறது.ரவிச்சந்திரன், தவளக்குப்பம்.