உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

தெரு விளக்கு எரியுமா?

ராஜ்பவன் தொகுதி, அரவிந்தர் தெருவில், தெரு மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. முத்துகுமாரசாமி, புதுச்சேரி.

ரயில்வே கேட் சாலை சீரமைக்கப்படுமா?

வில்லியனுார் - கூடப்பாக்கம் ரயில்வே கேட் சாலை, சீர் செய்யமால் இருப்பதால், வாகனங்கள் கடந்து செல்ல மிகவும் சிரமமாக இருந்து வருகிறது.ரமேஷ், வில்லியனுார்.

பயணியர் நிழற்குடை தேவை

முருங்கப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடையின்றி இருப்பதால், பொதுமக்கள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர். ரமேஷ், முருங்கப்பாக்கம்.

நாய்கள் தொல்லை

அரியாங்குப்பம் சொர்ணா நகரில், நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மதி, அரியாங்குப்பம்.

சாலை சீரமைக்கப்படுமா?

லாஸ்பேட்டை ராஜாஜி நகர் மெயின் ரோடு, குண்டும், குழியுமாக இருப்பதால், அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி