புகார் பெட்டி புதுச்சேரி
நாய்கள் தொல்லை
லாஸ்பேட்டை, நெசவாளர் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், குடியிருக்கும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ஆறுமுகம், லாஸ்பேட்டை. தெரு விளக்கு எரியுமா?
காலாப்பட்டு, அம்மன் நகரில், பல நாட்களாக தெரு விளக்கு எரியாமல் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.குமரன், காலாப்பட்டு. மாடுகளால் போக்குவரத்து இடையூறு
முருங்கப்பாக்கம், அரவிந்தர் நகர் 8வது குறுக்கு தெருவில், மாடுகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.மதிவாணன், முருங்கப்பாக்கம். சுகாதார சீர்கேடு
தவளக்குப்பம், ஆரம்ப சுகாதார மருத்துவமனை வீதியில், குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ரகு, தவளக்குப்பம்.