புகார் பெட்டி: புதுச்சேரி
சாலை மோசம் கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை மெகா பள்ளங்களுடன் மோசமாக உள்ளதால் விபத்து நடந்து வருகிறது. கணேசன், அரியாங்குப்பம். குண்டும் குழியுமான சாலை மண்ணடிப்பட்டு சந்தை புதுக்குப்பம் வள்ளலார் நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அதியடைந்து வருகின்றனர். பரணிதரன், சந்தை புதுக்குப்பம். டவுன் பஸ் தேவை புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பாரதி, புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை புவன்கரே வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மாணிக்கம், புதுச்சேரி.