புகார் பெட்டி: புதுச்சேரி
மேன்ேஹால் சேதம்
புதுச்சேரி, வழுதாவூர் சாலை தருமபுரி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல் சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கண்ணன், தருமபுரி. சுகாதார சீர்கேடு
திருக்கனுார் அருகேயுள்ள தமிழகப் பகுதியான புதுகுப்பம் நான்கு முனை சந்திப்பு திருவக்கரை செல்லும் சாலையில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சந்தோஷ், புதுகுப்பம். வாகன ஓட்டிகள் அவதி
புதுச்சேரி ஊசுடு – பத்துக்கண்ணு செல்லும் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குரு, பத்துக்கண்ணு. சாலையில் மெகா பள்ளம்
அய்யங்குட்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் நடுவே உள்ள மெகா சைஸ் பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்ணா, புதுச்சேரி.