உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

சாலையில் சரக்கடிக்கும் குடிமகன்கள்

தட்டாஞ்சாடி தொழிற்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகர் ஆர்ச் அருகே சாலையிலேயே குடிமகன்கள் மது குடிப்பதால், பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.பரணி, தட்டாஞ்சாவடி.

மின் விளக்கு எரியுமா?

வில்லியனுார், ஆரியப்பாளையம் சாராய ஆலை செல்லும் சாலையில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.ரஜினிமுருகன், வில்லியனுார்.

சாலை ஆக்கிரமிப்பு

பாக்கமுடையான்பட்டு சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.ரவி, புதுச்சேரி.

நாய்கள் தொல்லை

மூலக்குளம் மோதிலால் நகர் 3 வது, குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ஆறுமுகம், மூலக்குளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை