உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

சாலையில் மெகா சைஸ் பள்ளம் காமராஜர் சாலையில் இருந்து கொக்கு பார்க் நோக்கி வரும் இணைப்பு வீதியின் நடுவில் மேன் ஹோலில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் முன் சரி செய்ய நடவடிக்கை தேவை. ஆனந்து, தட்டாஞ்சாவடி. தெரு விளக்கு எரியவில்லை உழவர்கரை, எம்.ஜி.ஆர். நகர் வடக்கு, 2வது குறுக்கு தெருவில் தெருவிளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. கனகசபேசன், உழவர்கரை. பேனர்களால் போக்குவரத்துக்கு இடையூறு சோரப்பட்டு, மெயின் ரோட்டில் பேனர்கள் வைத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. செல்வம், சோரப்பட்டு. மின் கம்பம் சாய்ந்துள்ளது காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகர், 76வது குறுக்கு தெருவில், மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. தனலட்சுமி, ரெயின்போ நகர். கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வில்லியனுார் , மணவெளி, தண்டு கரை வீதியில் ஏரி வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குமார், வில்லியனூர். பாராக மாறிய விளையாட்டு மைதானம் லாஸ்பேட்டை, தாகூர் அரசு கல்லுாரி விளையாட்டு மைதானம், இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறி வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்புசாமி, லாஸ்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ