உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

கலங்கலான குடிநீர் கதிர்காமம் பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மகாலிங்கம், கதிர்காமம். தெரு நாய்கள் தொல்லை திரிவேணி நகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சந்திரசேகர், புதுச்சே ரி . சாலையில் கழிவுநீர் உருளையன்பேட்டை, செயின்தெரசா தெருவில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. வள்ளி, உருளையன்பேட்டை. சாலையில் குப்பைகள் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மணிவண்ணன், தவளக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !