உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குண்டும் குழியுமான சாலை நெட்டப்பாக்கம் - கல்மண்டபம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். ராஜ்குமார், நெட்டப்பாக்கம். சுகாதார சீர்கேடு கரியமாணிக்கம், ஊரல் வாய்கால் சாலையோரம் உள்ள குடிநீர் உந்து நிலையத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கோவலன், சூரமங்கலம். விவசாயிகள் அவதி பண்டசோழநல்லுார் வயல்வெளி சாலை படுமோசமாக உள்ளதால் விவசாயிகள் அவதியடைகின்றனர். விஜய், பண்டசோழநல்லுார். பயணிகள் அவதி தவளக்குப்பத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர். தேவா, சேலியமேடு. தொற்று நோய் அபாயம் கரியமாணிக்கம், கூட்டுறவு வங்கி எதிரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுவதால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராஜவேல், பண்டசோழநல்லுார். தெரு விளக்கு எரியுமா? கல்மண்டபம் - பண்டசோழநல்லுார் சாலையில் தெரு மின் விளக்குகள் எரியாததால் திருட்டு பயம் ஏற்பட்டுள்ளது. சரண்யா, கல்மண்டபம். சாலை மோசம் பண்டசோழநல்லுார், சுடுகாட்டு சாலை படு மோசமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். சேரன், சூரமங்கலம். பொது மக்கள் அவதி ஏம்பலம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதியடைகின்றனர். மலர்செல்வி, ஏம்பலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை