புகார் பெட்டி
நாய்கள் தொல்லை ரெட்டியார்பாளையம், நண்பர்கள் நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. கண்ணன், ரெட்டியார்பாளையம். சுகாதாரசீர்கேடு கூனிச்சம்பட்டு, மணக்குள விநாயகர் நகரில் சாலை சேதமடைந்து, மழைநீர் தேங்கியுள்ளதால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது. குமரன், கூனிச்சம்பட்டு. மின் விளக்கு எரியுமா? கிருமாம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். ராதா, சேலியமேடு. விபத்து அபாயம் பனித்திட்டு - ரெட்டிசாவடி சாலையில் உள்ள ஓடைப்பாலம் சேதமடைந்து உடையும் நிலையில் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. முருகன், ரெட்டிச்சாவடி.