புகார் பெட்டி
மரக்கிளைகள் விழும் அபாயம் பாகூர்-கரையாம்புத்துார் சாலையின் இருபுறங்களில் மரக்கிளைகள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ரவிச்சந்திரன், புதுச்சேரி. கொசு தொல்லை காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகர் சிறுவர் பூங்காவில், கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. கல்யாணம், ரெயின்போ நகர். ஆக்கிரமிப்பு அதிகரிப்பு வில்லியனுார் கிழக்கு மாட வீதியில், ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ராமசாமி, வில்லியனுார். பஸ் நிலையம் தேவை வில்லியனுாரில் புதிய பஸ் நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரா, வில்லியனுார். பொதுமக்கள் அச்சம் சேதராப்பட்டு குமரன் நகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சூர்யா, சேதராப்பட்டு. குண்டும், குழியுமான சாலை லாஸ்பேட்டை ராஜாஜி நகர் மெயின் ரோடு குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை.