உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

சிக்னல் இயங்கவில்லை வில்லியனுார், மூலக்கடை சிக்னல் இயங்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ரஜினி முருகன், வில்லியனுார். கழிவுநீர் தேங்கி நிற்கிறது லாஸ்பேட்டை, மெயின் ரோடு, கொட்டுப்பாளையம் வாய்க்காலில் மரத்தின் வேர் சாய்ந்து கிடப்பதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ரமேஷ், லாஸ்பேட்டை. வீதியில் குப்பைகள் கொசப்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் குப்பைகள் சிதறி கிடக்கிறது. மகேந்திரன், கொசப்பாளையம். தெரு நாய்கள் தொல்லை தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் சாலையில் சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். வினோத், தட்டாஞ்சாவடி. டவுன் பஸ் தேவை தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் வசதி இல்லாமல் இருப்பதால் மரப்பாலம் சந்திப்பில் இருந்து பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். ராஜேஷ், புதுச்சேரி. போக்குவரத்து நெரிசல் ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மோகன், புதுச்சேரி. மூலக்குளத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆறுமுகம், சாலைத்தெரு. பள்ளத்தால் விபத்து அபாயம் ராஜிவ் சதுக்கம் முதல் இந்திரா சதுக்கம் வரை உள்ள சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. வெங்கடேஷ், அண்ணாநகர். கொசு தொல்லை ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மனோ, மூகாம்பிகை நகர். சுகாதார சீர்கேடு திருக்கனுார் அருகே புதுக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வீரப்பன், திருக்கனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை