உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி

வாய்க்கால் துார் வாரப்படுமா? காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகர், 3வது குறுக்கு தெருவில் உள்ள வாய்க்காலைதுார் வார வேண்டும். முருகன், ரெயின்போ நகர். சாலை படுமோசம் சொக்கநாதன்பேட்டை, ராமலிங்கம் நகர்,2வது குறுக்கு தெருவில், சாலை மிகவும்மோசமான நிலையில் உள்ளது. கணேஷ்குமார், சொக்கநாதன்பேட்டை. சமுதாயக் கூடம் சீரமைக்கப்படுமா? ஆலங்குப்பம், அன்னை நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெய்வசிகாமணி, ஆலங்குப்பம். தெரு விளக்கு எரியுமா? ஒதியம்பட்டு திருமால் நகரில், தெரு விளக்கு எரியாமல், அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது. சுப்ரமணி, ஒதியம்பட்டு. துர்நாற்றம் வீசுகிறது வில்லியனுார், பிள்ளையார்குப்பம், கூனி முடக்கு தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. நாகராஜன், வில்லியனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ