புதுச்சேரி: புகார் பெட்டி
நாய்கள் தொல்லை மூலக்குளம், ஜான்குமார் நகர் செல்லும் வழியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரத்தீஷ், ஜான்குமார் நகர். சிமென்ட் சிலாப் சேதம் முருகா தியோட்டர் சந்திப்பு அருகே வாய்க்கால் சிமென்ட் சிலாப் உடைத்து நடைபாதை வாசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ராஜ்குமார், வி.வி.பி.,நகர். தெரு விளக்கு எரியுமா? இந்திரா சதுக்கத்திலிருந்து வில்லியனுார் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மின் விளக்கு எரியாமல் உள்ளது. காமராஜ், ரெட்டியார்பாளையம். பயணிகள் அவதி புதிய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதியின்றி பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். பாலாஜி, புதுச்சேரி.