மேலும் செய்திகள்
கெட்டுப்போன உணவு அழிப்பு
09-Nov-2024
கோவையில், 'விஜயலட்சுமி ஆம்லெட் சென்டர்' என்ற பெயரில், 201 வகை முட்டை உணவுகளை பரிமாறும், மீனாட்சி குமார்: என் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை. எட்டாம் வகுப்பு வரைதான் படித்தேன். உறவினர் ஒருவர் வாயிலாகத்தான், கோவையில் தங்கப் பட்டறையில் பணியில் சேர்ந்தேன். ஒரு கட்டத்தில், நானே சொந்தமாக பட்டறை வைத்தேன். என்னிடம் ஆறு பேர் பணியாற்றினர்.வீட்டில் நானே சமைப்பேன். ஆம்லெட், ஆப்பாயில், கலக்கி, முட்டை பொரியல் என விதவிதமாக செய்து சாப்பிடுவேன். நான் சமைப்பதை சாப்பிட்ட எல்லாரும், 'சூப்பரா இருக்கே' என்றனர்.பல்வேறு காரணங்களால் தங்கப் பட்டறையை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதையடுத்து, 15 ஆண்டுகளுக்கு முன் வைசியாள் வீதியில், முட்டை உணவு கடையை துவங்கினேன். கடை அட்வான்ஸ், அடுப்பு, சேர், பாத்திரம் என, 40,000 ரூபாய் முதலீடு செய்தேன். ஆரம்பத்தில், முட்டையில், 21 வகை உணவுகளை அறிமுகப் படுத்தினேன். ஆம்லெட், ஆப்பாயில், கலக்கி, பொரியல் தவிர, முட்டை பீட்சா, காளான் ஆம்லெட், மல்லி ஆம்லெட், பூண்டு கலக்கி என கொடுத்தேன். ஆரம்பத்தில் வியாபாரம் சற்று குறைவுதான். 'தங்கத்தை விட்டுட்டு, முட்டைக்கு வந்து இப்படி ஆகிட்டியே' என்று, பலர் என்னை விமர்சனம் செய்தனர். ஆனாலும், எந்த தொழிலும் உடனே, 'பிக்கப்' ஆகாது என்பதால் பொறுமையாக இருந்தேன். எடுத்த முயற்சியை கைவிடாமல், 21 வகையில் இருந்து, 101 வகையாக உணவுப் பட்டியலை உயர்த்தினேன். இப்போது, 201 வகை முட்டை உணவுகளை தயாரிக்கிறோம். குறைந்தபட்சம், 15 ரூபாயி-ல் துவங்கி, அதிகபட்சம், 80 ரூபாய் வரை வகை வகையான முட்டை உணவுகள் இங்கு கிடைக்கும். நிறைய, 'யு - டியூபர்'களும் வரத் துவங்கினர்; வியாபாரமும் சூடுபிடிக்கத் துவங்கியது.மாலை 5:30 முதல் இரவு 10:30 மணி வரை கடை இருக்கும்; கூட்டம் குறையாமல் பிசியாகவே இருக்கும். பலர், பல ஆண்டுகளாக எங்களுக்கு தொடர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். மொத்தம், ஐந்து வகை மசாலாக்களை வீட்டில் நாங்களே தயாரிக்கிறோம். ஒவ்வொரு வகை உணவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பும் வீட்டில் செய்து பார்ப்போம். நன்றாக இருக்கும் உணவுகளை மட்டும் அறிமுகப்படுத்துவோம்.விரைவில், உணவு ஐட்டங்கள், 201ல் இருந்து 360 வகையாக உயர்த்தவுள்ளோம். வானவில் முட்டை, ஆம்லெட் பணியாரம் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்த உள்ளோம்.இப்போது, என் மகள் கருமத்தம்பட்டி பகுதியில் ஒரு கிளையை துவங்கி உள்ளார். விரைவில் என் மனைவி தலைமையில், மற்றொரு கடையை துவங்க இருக்கிறோம்.
09-Nov-2024