மேலும் செய்திகள்
'நடிகர்' ஆக மேயர்; 'சீட்' பெற பா.ஜ., 'பிரேயர்'
15-Apr-2025
'பிரீமியம் ஷூ' ஷாப், இறைச்சி கடை, இரவு உணவகம் என, பல தொழில்கள் நடத்தி, மாதம், 10 லட்சம் ரூபாய் அளவுக்கு, 'டர்ன் ஓவர்' செய்யும் திருச்சியை சேர்ந்த பாஷு: பிளஸ் 2 வகுப்பு வரை படித்து விட்டு என் அண்ணன்கள் வைத்திருந்த செருப்பு கடைகளில் வேலை பார்த்தேன். அப்போதே எனக்குள் பிரீமியம், 'ஷூ'க்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற யோசனை தோன்றியது. அப்போது நான் ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சம்பாத்தியம் இல்லாததால், எனக்கு அவரை திருமணம் செய்து வைக்க, அவரின் பெற்றோர் தயங்கினர்.நண்பர்கள், வெளிநாடு செல் என்றதால் மலேஷியா சென்றேன். ஹோட்டலில் வெயிட்டராக வேலைக்கு சேர்ந்தேன். 17 மணி நேர வேலை; 25,000 ரூபாய் சம்பளமாக கிடைத்தது. என் வேலையை பார்த்து, பக்கத்து ஹோட்டலில், 'ஜூஸ்' போடும் வேலைக்கு கூப்பிட்டனர்; அங்கு வேலைக்கு சேர்ந்தேன். ஒரு கட்டத்தில், ஹோட்டலில் சில சிக்கல்கள் வர, அந்த ஹோட்டலுக்கு, 'இன்சார்ஜாக' மாறி, ஐந்து மாதத்துக்குள் ஹோட்டலிலிருந்த எல்லா பிரச்னைகளையும் தீர்த்து, லாபத்துக்கு கொண்டு வந்தேன். இதையெல்லாம் உறவினர்கள் வாயிலாக என் காதலியின் தந்தை விசாரித்து தெரிந்து கொண்ட பின், என் மீது நம்பிக்கை வைத்து, அவர் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்தார்.ஊருக்கு திரும்பிய பின் சொந்தமாக தொழில் துவங்க முடிவு செய்தேன். என் மாமனார் செய்து வந்த கோழி இறைச்சி கடை தொழிலையே நானும் செய்தேன். வித்தியாசமான சலுகைகளுடன், மிக சுத்தமாக தொழில் செய்ததில், இரண்டே மாதத்தில் விற்பனை அதிகரித்தது. அடுத்து உணவகம் துவக்கினேன்; ஆறே மாதத்தில் அந்த தொழிலிலும் ஜெயித்தேன்.நான் ஆரம்பிக்க நினைத்த, 'பிராண்டட் ஷூ' தொழிலை, 20 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவக்கினேன். வெளிநாடுகளில் இருந்து பிரீமியம் ஷூ, செருப்புகளை இறக்குமதி செய்யும், 'டீலர்'களை கண்டுபிடித்து, 'ஆர்டர்' எடுத்து, விற்பனையை துவக்கினேன். ஷூ, செருப்பு மட்டுமல்லாமல் வாட்ச், பெல்ட், பர்ஸ் உள்ளிட்டவையும், 'பிராண்டட் ஐட்டங்களாக' வைத்திருந்ததால், இளைஞர்களை எங்கள் கடை கவர்ந்தது. மற்ற பகுதிகளில் விற்கப்படும் விலையை விட, நான் குறைவான விலையில் விற்பனை செய்தேன். அதனால், இரண்டு மாதத்தில் இந்த தொழிலிலும் வெற்றி கிடைத்தது. ஷூ கடை ஆரம்பிக்க மட்டும், 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். இப்போது, மூன்று தொழில்களிலும் சேர்த்து மாதம் 10 லட்சம் ரூபாய் 'டர்ன் ஓவர்' செய்கிறேன். அதை இன்னும் பல மடங்காக்க வேண்டும் என்பதே என் லட்சியம்!
15-Apr-2025