மேலும் செய்திகள்
மருத்துவம் என்பது மருந்து மட்டுமல்ல மனிதநேயமும் கூட!
12-Sep-2026 | 1
10 ரூபாய்க்கு தோசையும் மீன் குழம்பும் தருகிறேன்!
08-Sep-2026
சமூக வலைதள பிரபலமும், பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகளுமான, அமெரிக்காவில் வசிக்கும் பல்லவி: அமெரிக்காவில் தனியார் தொழில்நுட்ப கம்பெனியில் வேலை பார்த்தபடியே, சமூக வலைதள பிரபலமாக இருக்கிறேன். என் குழந்தை பருவம் மிகவும் சந்தோஷமானதாக இருந்தது. வீட்டில் இசை தொடர்பான விவாதங்கள் நடந்தபடியே இருக்கும். எப்போதும் இசை சூழலிலேயே வளர்ந்திருக்கிறேன். கொஞ்ச நாள் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டேன். திருமணத்திற்கு பின், அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இங்கு வந்தும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடிக் கொண்டிருந்தேன். இசையமைப்பாளரின் மகள் என்பது எனக்கு பெருமையாக இருந்தாலும், எனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கொரோனா ஊரடங்கு நேரத்தில், சமையலறையில் வேலை பார்ப்பது, வீட்டில் இருக்கும் போது நடக்கும் சிறு சிறு விஷயங்களை, என் பாணியில் நகைச்சுவை கலந்து காணொளிகளாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தேன். அந்த காணொளிகளை பார்த்த பலரும், 'அப்படியே என்னை பார்த்த மாதிரியே இருக்கு; எனக்கும் இப்படித்தான் நடந்தது' என கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். அதை படித்தபோது, சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்ற நிறைவு வந்தது. நான் பதிவிடும் காணொளிகள், 60 நொடிகள் தான் வரும். ஆனால், அதன்பின் நிறைய மெனக்கெடல் இருக்கிறது. நான் வெளியிடும் காணொளிகளின் கருத்துக்கள், தினசரி வாழ்க்கையில் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்பவை தான். என் கணவரின் ஆதரவு இல்லையெனில், சமூக வலைதள பயணம் சாத்தியமே இல்லை. 'உனக்கு பிடித்ததை செய்' என்று கூறி, கூடவே இருக்கும் அற்புதமான மனிதர். வெளிநாட்டு வாழ்க்கை என்பது, மற்றவர்கள் நினைப்பது போல் சொகுசானது இல்லை. பெற்றோர், சொந்த பந்தங்கள், நண்பர்கள் சூழ மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பழகிய எனக்கு, எந்த உதவியும் இல்லாத அந்த வாழ்க்கைக்கு பழகுவது, மிகவும் பெரிய சவாலாக இருந்தது. குழந்தைகளுக்கு நம் கலாசாரமும், பாரம்பரியமும் கற்றுக் கொடுத்து வளர்ப்பது, சாதாரண விஷயமில்லை. ஆனாலும், அமெரிக்க வாழ்க்கையிலும் அதையெல்லாம் விட்டுக் கொடுக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன். அப்பாவுக்கு பெருமை சேர்ப்பது மாதிரி வாழணும் என்பது மட்டுமே லட்சியம்!
12-Sep-2026 | 1
08-Sep-2026