உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ரஜினி மவுசு இதுவரைக்கும் குறையலை!

ரஜினி மவுசு இதுவரைக்கும் குறையலை!

படையப்பா படம் வெளியாகி, 21 ஆண்டுகள் ஆகியுள்ளன. அதில் இடம்பெற்ற, 'காமெடி' காட்சிகள் பற்றி, அந்தப் படத்தில், நடிகர் ரஜினியுடன் நடித்த, நகைச்சுவை நடிகர் செந்தில்: வருஷங்கள் ரொம்ப வேகமா ஓடுது. ஏற்கனவே, ரஜினியுடன் பல படங்கள்ல நடிச்சிருக்கேன்.படையப்பா படத்தில் நடிக்கக் கூப்பிட்டதும், 'ஓகே' சொல்லிட்டேன். அவரின் நண்பர் அழகேசன்ங்கிற கேரக்டர்ல நடிச்சிருப்பேன். பல காட்சிகளில் இருவரும் இணைந்து நடித்திருப்போம்.அந்தப் படத்தில், ரஜினி மட்டுமல்ல, சிவாஜி கூடவும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது, ரொம்பவே சந்தோஷம். அந்தப் படத்துல, 'மாப்ள இவரு தான்... ஆனா, அவர் போட்டிருக்கிற சட்டை என்னுது' என்ற காமெடி ரொம்ப பேசப்பட்டுச்சு. 'இந்த சீன் ரொம்ப பெரிசா இருக்கே... குறைச்சிடலாம்'னு இயக்குனர், கே.எஸ்.ரவிகுமார் சொன்னார். ஆனா, ரஜினி தான், 'நீளத்தை குறைச்சிட்டா, காமெடி, 'வொர்க் அவுட்' ஆகாது. இப்படி இருந்தா தான் நல்லாயிருக்கும்; எல்லாருக்கும் பிடிக்கும்'னு சொன்னார். ரஜினியோட, 'ஹ்யூமர் சீன்'கள் சூப்பரா வொர்க் அவுட் ஆகுறதுக்கு, அவருடைய, 'டைமிங் சென்ஸ்' தான் காரணம்.'மாப்ள இவரு தான்...' சீனுக்குத் தியேட்டர்ல பயங்கர கைத்தட்டல். 'படையப்பா, மேன் ஆப் தி பவர்னா, இந்த அழகேசன், மேன் ஆப் தி ப்யூட்டி' மற்றும் 'லேடீஸ் கேக்குறாங்கல்ல... சொல்லு சொல்லு'ன்னு, சின்னச் சின்ன வசனங்களும் அந்தக் காமெடியில பேசப்பட்டன. ரஜினி ஸ்பாட்டுக்கு வந்துட்டார்னா, ரொம்ப கலகலப்பா இருக்கும்; ஷூட்டிங் போறதே தெரியாது; எல்லாரும் செம ஜாலியா இருப்பாங்க. ரஜினி எந்தளவுக்கு ஜாலியா இருப்பாரோ, அதேயளவுக்கு, தனக்கு குடுக்குற சீனை எப்படி பண்ணலாம்னு யோசிச்சிட்டே இருப்பார்.அவருக்கான சீன் எடுக்கப் போறதா இருந்தா, டைரக்டர் அவரைத் தனியா கூட்டிட்டு போயிடுவார். கூட இருக்கிறவங்க நடிக்க, முழு சுதந்திரம் கொடுப்பார், ரஜினி. அவருக்கு துவக்கத்தில் என்ன மவுசு இருந்துச்சோ, அதே மவுசு இப்ப வரைக்கும் இருக்கு. இதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி