மேலும் செய்திகள்
இயலாமை என்பது ஒரு மனநிலை மட்டுமே!
26-Oct-2025
கோழி வளர்ப்பில் திருப்பூர் 'நம்பர் 1'
08-Nov-2025
தேன் மற்றும் தேனீ பெட்டி விற்பனையில் ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து வரும், 'ஏடிபி ஏபியரி' நிறுவனத்தின் உரிமையாளரான, ஈரோடு மாவட்டம், சிவகிரியை சேர்ந்த தண்டாயுதபாணி: சிறுவயது முதலே தேனீக்களை பார்த்தாலே எனக்கு மிக சுவாரஸ்யமான உணர்வு தோன்றும். அவற்றை பார்த்து ரசிப்பது, எப்படி தேனை சேகரிக்கின்றன என்று ஆராய்வது என, இவையெல்லாம் எனக்கு பொழுதுபோக்காக இருந்தன. கல்லுாரி முடிந்ததும், அந்த ஆர்வம் ஒருபடி மேலே சென்றது. தமிழக வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய, தேனீ வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்றேன். அந்த பயிற்சி தான், என் வாழ்க்கையில் பெரிய திருப்பமாக அமைந்தது. தேனீ வளர்ப்பின் நுணுக்கம், தேன் அடைகள் பராமரிப்பு, தேனீக்கள் நம்மை கொட்டாமல், பாதுகாப்புடன் கையாளும் வழிகள் என, அனைத்தையும் கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில், தேனீ வளர்ப்பை பொழுதுபோக்காகத்தான் செய்தேன். நண்பர்கள், விவசாயிகள் கேட்கும்போது, அவர்களின் தேவைக்கு ஏற்ப, தேன் எடுத்து கொடுப்பதுடன், தேனீப் பெட்டிகளை வாங்கி, விற்பனை செய்தும் வந்தேன். கடந்த 2002ம் ஆண்டில்தான் இதை முழு நேர தொழிலாக மாற்ற முடிவெடுத்தேன். விவசாயிகள் உதவியுடன், அருகிலுள்ள தேன் கூடுகளில் இருந்து தேன் எடுத்து விற்றேன். அப்போது, தேனீ பெட்டிகளின் தேவை அதிகரிக்க, அதன் தயாரிப்பிலும் முழுமையாக ஈடுபட்டேன். என்னுடைய தொழில் வளர துவங்கியது. மூன்று தேனீ பெட்டிகளுடன் ஆரம்பித்த தொழில், இன்று, 10,000 தேனீ பெட்டிகளை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. என் நிறுவனத்தில், 100 பேர் வரை வேலை செய்கின்றனர். நாளொன்றுக்கு கிட்டத்தட்ட, 300 தேனீ பெட்டிகள் தயார் செய்யும் கட்டமைப்பு எங்களிடம் உள்ளது. கடந்தாண்டில் மட்டும், 40,000க்கும் மேற்பட்ட தேனீ பெட்டிகளை விற்றுள்ளோம். தேன் மற்றும் தேனீ பெட்டிகள் விற்பனையை சேர்த்தால், நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம், 10 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். எங்களின் முக்கியமான வாடிக்கையாளர்கள், தேன் விற்பனையில் ஈடுபட்டு வரும், மொத்த வியாபாரிகள்; தேனீ வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர்கள்; அதை தொழிலாக செய்ய விரும்புவோர் தான். தமிழகம் முழுதும் இருந்து தேனீ பெட்டிகளுக்கு ஆர்டர் தருகின்றனர். இந்த தொழிலை துவங்கி, 25 ஆண்டுகளை கடந்திருக்கிறேன். ஆர்வம் இருக்கும் விஷயத்தில், நம்பிக்கையுடனும், முழு ஈடுபாட்டுடனும் இறங்கி உழைத்தால், நிச்சயம் ஜெயிக்க முடியும்! தொடர்புக்கு: 93449 93450
26-Oct-2025
08-Nov-2025