12 ஆண்டுக்கு பின் தமிழகத்துக்கு கிடைத்த விருது!
செவிலியர் துறையின் உயரிய விருதான, 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருதை பெற்று உள்ள, விருதுநகரை சேர்ந்த அலமேலு மங்கையர்கரசி: என் சொந்த ஊர், ராஜபாளையம் பக்கத்தில் உள்ள சேத்துார் கிராமம். நான் மருத்து வராக வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. பிளஸ் 2வில் 1,060 மதிப்பெண் எடுத்திருந்தும், செலவு செய்து படிக்க வைக்க முடியாத சூழல். இதனால், அரசு கல்லுாரியில் நர்சிங் முடித்து, 2008ல், திருவண்ணாமலை மாவட்டம், அரட்டவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி கிடைத்தது. அடுத்த ஆண்டு, விருதுநகர் மாவட்டம், குன்னுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணி மாறுதல் ஆனேன். குன்னுாரை பொறுத்த வரை மருத்துவமனை பிரசவங்கள் குறைவு. 'ஆஸ்பத்திரிக்கு வந்தால் சிசேரியன் செய்துடுவீங்க...' என்று கிராம மக்கள் கூறுவர். அவர்களிடம் பேசி, பயத்தை போக்கினேன்; மருத்துவமனை பிரசவங்கள் அதிகமாகின. அதன்பின் 2011ல், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பணி மாறுதலானது. கோத் த கிரியில் பழங்குடி மக்கள் அதிகம். அவர்களுக்கு மகப்பேறு குறித்தோ, குடும்பகட்டுப்பாடு கு றித்தோ விழிப்புணர்வு கி டையாது. அடுத்தடுத்து குழந்தை பெற்றுக்கொண்டு, உடல் அளவில் ரொம்ப பல வீனமாக இருந்த பெண் களிடம், கருத்தடை, ஒரு பிரசவத்திற்கும், இன்னொரு பிரசவத்திற்குமான இடைவெளி சம்பந்தமாக பேச ஆரம்பித்தேன். கோத்தகிரி பகுதியில் இருக்கிற பந்தலுாரில் நடந்த குடும்ப கட்டுப்பாடு முகாமில், 14 நாட்கள் பழங்குடி மக்களுடன் தங்கி வேலை பார்த்தேன். கடந்த 2013ல், ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு பணி மாறுதல் ஆனேன். குழுவாக இணைந்து மருத்துவர்கள், ஸ்பான்சர்களிடம் பணம் வாங்கி, பிரசவ அறைகளை மேம்படுத்தினோம். கிராமங்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மாதவிடாய், மகப்பேறு குறித்த விழிப்புணர்வு, ஆட்டோ சங்கங்களுடன் இணைந்து ஹெச்.ஐ.வி., விழிப்புணர்வு, காசநோய் விழிப்புணர்வு, உடல் உறுப்புதான விழிப்புணர்வு என, மக்கள் சார்ந்து இயங்க ஆரம்பித்தேன். மகப்பேறு மருத்துவம் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, செவிலியர் துறையின் உயரிய விருதான, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு விடம் இருந்து பெற்றது மிகவும் சந்தோஷம். மேலும், 12 ஆண்டு கள் கழித்து, தமிழகத் தில் இருந்து இந்த விருதை பெறும் செவிலியர் என்ற பெருமையும் எனக்கு கிடைத்தது. தொடர்ந்து மக்களுக் காகவே இயங்குவேன்!