உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  சென்னையும் இயற்கையும் கொடுத்த வாழ்வு!

 சென்னையும் இயற்கையும் கொடுத்த வாழ்வு!

செ ன்னை, மெரினா கடற்கரையில், 13 ஆண்டு களாக, 'எம்.ஜி.ஆர்., தாய்வழி உணவகம்' என்ற பெயரில், பாரம்பரிய உணவுகள் தயாரித்து விற்பனை செய்து வரும், ரவி: மனிதன் போதும் என்று சொல்லும் ஒரே விஷயம், உணவு மட்டும் தான். அதை நிறைவாகவும், ஆரோக்கியமாகவும் கொடுக்க வேண்டும் என்பதே என் இலக்கு. எங்கள் உணவகத்தில், சிறுதானிய உணவுகள் தான் பிரதானம். செய ற்கை நிறங்கள், சோடா உப்பு என, ஆ ரோக்கியம் இல்லாத எந்த பொருளையும் பயன்படுத்துவது இல்லை. உணவகம் உட்பட பல கடைகளில் கூலி வேலை பார்த்த நான், 2012ல் சைதாப்பேட்டையில், துரித உணவகம் ஒன்றை திறந் தேன். ஒருமுறை சிவகாசி சென்றிருந்தோம். அங்கு கூழ், களி, சூப் வகைகள் விற்கும் இயற்கை உணவகத்தை பார்த்த பின், எனக்கும் இயற்கை உணவகம் ஆரம்பிக்கும் ஆசை வந்தது. இதனால், சிவகாசி உணவ கத்திலேயே ஆறு மாதம் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். சைதாப்பேட்டையில், தாய்வழி உணவகத்தை நானும், நண்பனும் சேர்ந்து ஆரம்பித்தோம்; வியாபாரம் சரியாக நடக்கவில்லை. வாடிக்கையாளர் ஒருவர், 'பீச்சில் இந்தக் கடை இருந்தால் நல் லா வியாபாரம் ஆகும்' என்று சொன்னார். அடுத்த நாள் அதிகாலை, 4:00 மணிக்கு கடற்கரைக்கு, இருசக்கர வாகனத்தில் சில ஜூஸ் வகைகளை விற்பனைக்கு எடுத்து சென்றேன்; முதல் வாரமே வியாபாரம் நன்றாக நடந்தது. அதனால், அங்கேயே கடையை ஆரம்பித்தோம். சில மாதங்களில் எனக்கு திருமணம் ஆனது. மனைவியும் தொழிலில் இணைந்தார். முத லில் மூன்று ஜூஸ் வகைகள், இரண்டு சூப் வகைகள் தயாரித்து, விற்பனை செய்து வந்தோம். இப்போது, 50க்கும் மேற்பட்ட ரகங்களில், உணவுகளை விற்பனை செய்து வருகிறோம். வியாபாரம் அதிகரித்ததால், திருவான்மியூர், பெசன்ட் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்து ஆறு கிளைகளை திறந்தோம். ஆறு கிளைகளுக்கும் சேர்த்து, ஒரே சமையலறையில் உணவுகள் தயார் செய்து வருகிறோம். தின மும் அதிகாலை 2:30 மணிக்கு உணவுகளை தயாரிக்க ஆரம்பித்தால், 4:30 மணிக்கு உணவுகள் தயார் ஆகிவிடும். வாகனங்களில் விற்பனைக்கு எடுத்து செல்கிறோம். காலை 9:00 மணி வரை வியாபாரம் இருக்கும். நடைபயிற்சி செய்வோர் முதல் பெரிய அலுவலகத்தில் பணிபுரிவோர் என, 600க்கும் மேற்பட்ட நிரந்தர வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். கடினமாக உழைக்கிறோம். ஆரோக்கியத்தை விதைக்கிறோம். மாதம், 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறோம். வாழ்க்கை நிறைவாக நகர்கிறது. இது சென்னையும், இயற்கையும் கொடுத்த பெருவாழ்வு. எப்போதும் அதற்கு நன்றியுடன் இருப்போம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை