மேலும் செய்திகள்
சகதியான வெடால் சாலை கிராமத்தினர் கடும் அவதி
22-May-2025
கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட கூலியாமேடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை பராமரிப்பு இன்றி ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது.இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், ஆய்வு செய்து சேதமடைந்துள்ள சிமென்ட் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மா. பாண்டியன், கடலுார்.
22-May-2025