/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; கிழிந்து தொங்கும் பேனரால் விபத்து அபாயம்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; கிழிந்து தொங்கும் பேனரால் விபத்து அபாயம்
கிழிந்து தொங்கும் பேனரால் விபத்து அபாயம்
சித்தாமூர் அருகே கயப்பாக்கம் கிராமத்தில் அச்சிறுப்பாக்கம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. தினசரி இருசக்கர வாகனம், கார், பேருந்து மற்றும் லாரி என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.கயப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் விளம்பர பேனர் சேதமடைந்து தொங்கிய படி உள்ளது.பலத்த காற்று வீசினால் விளம்பர பேனர் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விபத்து ஏற்படும் நிலையில் உள்ள விளம்பர பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -ஏ.கண்ணன், சித்தாமூர்.