/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் பணியை துவக்குவது எப்போது?
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் பணியை துவக்குவது எப்போது?
மழைநீர் வடிகால்வாய் பணியை துவக்குவது எப்போது?
செங்கல்பட்டு நகராட்சியில், அழகேசன் நகரில், பல ஆண்டுகளுக்கு முன் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. இந்த வடிகால்வாய் பழுதடைந்து உள்ளது. மழைக்காலங்களில், மழைநீருடன் கழிவுநீர் செல்வதால், நகரவாசிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இதனால், மழைநீர் கால்வாய் புதிதாக கட்டித்தர வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் நகரவாசிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மழைநீர் கால்வாய் புதிதாக கட்ட, பொது நிதியிலிருந்து 27 லட்சம் ரூபாய் ஒதுக்கி, நகரமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இப்பணிகளை விரைந்து துவக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கிருஷ்ணபிரியா, அழகேசன் நகர்.