உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி : திறந்த நிலையில் ஏசி பெட்டி பாதசாரிகளுக்கு இடையூறு

புகார் பெட்டி : திறந்த நிலையில் ஏசி பெட்டி பாதசாரிகளுக்கு இடையூறு

திருப்போரூர் ரவுண்டானா அருகே போலீஸ் குடியிருப்பு செல்லும் தெருவில் வங்கிகள், வணிக கடைகள், வீடுகள் உள்ளன. இத்தெரு வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர்.இத்தெருவில் உள்ள தனியார் வங்கி கட்டடத்தின் வெளிப்புற சுவரில் 'ஏசி' தொடர்புடைய கம்ப்ரசர், கன்டென்சர், மின்விசிறி அடங்கிய 'அவுட்டோர் யூனிட்' எனப்படும் பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது.இது திறந்த நிலையில் இருப்பதால், அவ்வழியாக மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், வெப்பத்தையும் வெளியேற்றுவதால், பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது. கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள இந்த 'ஏசி' பெட்டிக்கு மூடி அமைக்க வேண்டும் அல்லது இடையூறு இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும்.- கே.விஜயகுமார், திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை