உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும்

புகார் பெட்டி வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும்

வண்டலுார், உயிரியல் பூங்கா சந்திப்பிலிருந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்லும் ஜி.எஸ்.டி., சாலையில், பேருந்து முனையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன், 50 மீ., துாரத்தில் வேகத்தடை உள்ளது.இந்த வேகத்தடையின் மீது வெள்ளை வண்ணம் பூசப்படவில்லை. இதனால், மிக நெருக்கமாக வரும் போது தான், வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிகிறது.அப்போது, வாகன ஓட்டிகள் திடீரென வேகத்தைக் குறைப்பதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி, தினமும் 10க்கும் மேற்பட்ட சிறு விபத்துகள் நடக்கின்றன.இதனால், வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம், கைகலப்பும் அரங்கேறுகிறது.எனவே, வாகன ஓட்டிகளின் கண்களுக்குப் புலப்படும்படி, வேகத்தடையின் மீது வெள்ளை வண்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.ஜெரீனா பேகம்,ஊனமாஞ்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை