புகார் பெட்டி சாய்ந்துள்ள மின்கம்பம் வேலுார் கிராமத்தில் பீதி
சூணாம்பேடு அருகே, வேலுார் காலனி பகுதியில் கடுக்கலுார் செல்லும் தார்ச்சாலை உள்ளது.சாலையோரத்தில் குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாய்ந்து உள்ளது.பலத்த காற்று வீசினால், மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், அப்பகுதிவாசிகள் பீதியில் உள்ளனர்.மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சாய்ந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கா.சின்ராஜ்,புத்திரன்கோட்டை.