குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ம துராந்தகம் நகராட்சியில் உள்ள பார்த்தசாரதி கோவில் தெருவில், கழிவுநீர் கால்வாய் உள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை, கழிவுநீர் கால்வாயில் வீசி செல்வதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி உள்ளது. இதில், அப்பகுதியில் உலா வரும் பன்றிகள் கழிவுநீர் கால்வாயை கிளறி விடுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியாகி வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாயில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - ம.பார்த்திபன், சிலாவட்டம்.