உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / சாலை ஓரத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்

சாலை ஓரத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்

ஓ.எம்.ஆர்., சாலையில், திருப்போரூர் - தண்டலம் இடையே, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையின் நடுவே உள்ள மீடியன் பகுதியில், மண் குவியல் அதிகரித்துள்ளது.வாகனங்கள் செல்லும் போது, மண் குவியல் காற்றில் பறப்பதால், இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.திடீரென கண்களில் விழும் மணலால், சிலர் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. சாலையில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.வெங்கடேசன்,திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ