புகார் பெட்டி//சாலையில் ஓடிய கழிவுநீர் மேடவாக்கத்தில் அவதி
சாலையில் ஓடிய கழிவுநீர் மேடவாக்கத்தில் அவதி
பரங்கிமலை ரயில் நிலையம்- - மேடவாக்கம் சாலையில், தினசரி ஆயிரக்கணக்கில் வாகனங்கள் பயணிக்கின்றன. மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம் பகுதிவாசிகளின் முக்கிய வழித்தடமாக, இச்சாலை உள்ளது.மெட்ரோ விரிவாக்கப் பணியால், சாலை பாதியாக சுருங்கி உள்ளது. இதனால், இச்சாலை எப்போதும் வாகன நெரிசலாகவே இருக்கும்.கீழ்க்கட்டளை சந்திப்பில், அருள் முருகன் தெரு இணைப்பு பகுதியில், கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. அருள் முருகன் நகரிலிருந்து காவல் நிலையம், பேருந்து நிலையம், கடைகளுக்கு செல்ல, சாலையை கடக்கும் பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, முக்கிய சந்திப்பாக உள்ள இப்பகுதியை, விரைந்து சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜசேகரன், கீழ்க்கட்டளை.